உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுக்கவிதை முற்போக்கும் பிற்போக்கும்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10

நா. வானமாமலை

கொள்கையையும் உருவாக்கினார். மனித நடத்தை குறித்து அவரது கருத்தோட்டத்தை அறிந்துகொள்ளக் கீழ்வரும் இரண்டு வினாக்களை எழுப்பி அவற்றிற்கு விடையாக அவரது கொள்கையின் அடிப்படையில் விளக்கம் கூறுவோம்:

1 மனித நடத்தையின் இயக்கு சக்தி எது?
2 அவ்வியக்கத்தைக் கட்டுப்படுத்தும் விதிகள் எவை?

இவ்வினாக்களுக்கு ஃபிராய்டு கூறும் விடை வருமாறு: மனிதன் இன்பம் நாடுகிறான். இன்பம் நாடும் உணர்ச்சி Ad என்றம் Libitio என்றும் கூறப்படும். இது இணை விழைச்சத் தன்மையுடையது (sexual). இதுவே மனிதனது பிரதானமான உணர்ச்சி. இதுவே அவனது அக இயக்கத்திற்கும் புற இயக்கத்திற்கும் அடிப்படையான இயக்கு சக்தியாகும்.

அவனது இன்ப நாட்டத்திற்குத் தடையாக உள்ளது சமுகக் கட்டுப்பாடுகள். இக்கட்டுப்பாடுகள் விலங்குகளுக்கு இல்லை. மனித சமுதாயத்தால் தடுக்கப்பட்டவைகள், மனிதனது இன்ப நாட்டத்திற்குத் தடைச் சுவர்களாக இருக்கின்றன. அவனது இன்ப ஆசை தடுக்கப்படும்பொழுது அது மறைத்துவிடுவதில்லை. அது உணர்விலிருந்து {conscious), ஆழ்ந்த (sub conscious) மட்டத்திற்குச் சென்று விடுகிறது. இவ்வாறு பல தடைப்பட்ட ஆசைகளால் உருவானது ஆழ்உணர்வு {sub conscious). சில ஆசைகள் தவறானவையென்று உணர்வு கருதி அவை நிறைவேறாமற் போனால், அவை ஆழ்ந்த உணர்விற்குச் சென்றுவிடும். இவை சமயம் நேரும் பொழுது உணர்விற்குத் தெரியாமல் மாறுவேடத்தில் வெளிப்டும். இவ்வாறு உணர்வுலகத்திற்கும் ஆழ் உணர்வுலகத்திற்கும் போராட்டம் நடைபெறும்.

உதாரணமாக, ஒரு மனிதன் ஒரு துணிக்கடைக்குப் போகிறான். பல நிறத் துணிகளைக் கடைக்காரன் எடுத்தெறிகிறான். பச்சை நிறத்தில் கரும்புள்ளிகளுள்ள ஒரு துணியை அவன் தடவி பார்க்கிறான். பலமுறை தடவிப் பார்க்கிறான். கடைக்காரன் அதைப் பார்த்து “இது வேண்டுமா?” என்று கேட்கிறான். அவன் உணர்ச்சியோடு “வேண்டாம் - வேண்டாம்” என்று சொல்லிவிட்டு எதனையும் வாங்காமல் போய் விடுகிறான். பச்சையும் கருப்புமான நிறங்களைக் கண்ட போதெல்லாம் அவன் சமநிலையிழக்கிறான். பதற்றம் ஏற்படுகிறது, இவன் ஃபிராய்டிடம் உறக்கம் வரவில்லை என்று சிகிச்சைக்குப் போகிறான்.