பக்கம்:புது டயரி.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குடைப் புராணம்

21

 அவள் பாவம், எனக்குச் சிற்றுண்டி அளித்துவிட்டு என் முன்னாலே உட்கார்ந்து தைத்துக் கொடுத்தாள். ‘நாளைப் போதுக்குச் சங்கடம் இல்லை’ என்று எண்ணிக் கொண்டேன்.

மறுநாள் அந்தக் கிழவன் வந்தால் நயமாகப் பேசி மற்றக் குடைகளை ஒக்கப் பண்ணலாம் என்று நினைத்தேன். அடுத்த நாள் அவன் வரவில்லை. என் மனைவி தைத்த குடையோடு அலுவலகம் போனேன்.

அலுவலகத்திலிருந்து திரும்புகாலில்தான் அந்தச் சம்பவம் நடந்தது. பஸ்ஸில் ஏகக் கூட்டம்; ஏற முடியவில்லை. அடுத்த நிறுத்தத்தில் பலர் இறங்குவார்கள். அங்கே போய் ஏறலாம். கையில்தான் குடையிருக்கிறதே! மழை பெய்துகொண்டிருந்தது. மெல்ல அடுத்த நிறுத்தத்தை நோக்கி நடந்தேன்.

திடீரென்று மழை அதிகமாயிற்று. எங்கிருந்தோ ஒரு காற்று அடித்தது பாருங்கள். என் குடை என் கையை விட்டுப் போய்விடும்போல் இருந்தது. அப்படியும் இப்படியும் திசை மாற்றிப் பிடித்தேன். சடக்கென்று குடை அப்படியே விரிந்துவிட்டது. காம்புப் பக்கத்துக்கு எதிரே, திரும்பி விரிந்துவிட்டது. கம்பிகளெல்லாம் விட்டுப் போயின. புயலில் அகப்பட்டவன் தலைக்கேசம் அலங்கோலமாக இருப்பதுபோல் கம்பிகள் ஒவ்வொரு திசையில் கால் பரப்பிக்கொண்டு நிற்கக் குடைத்துணி, எதிர்ப்புறத்தில் மாறி விரிந்து நின்றது. என்மேல் வருணன் அபிஷேகம் செய்து கொண்டிருந்தான்.

எனக்கு ஒன்றுமே விளங்கவில்லை. பல்லைக் கடித்துக் கொண்டு கம்பிகளைச் சேர்த்துக் குடைத் துணியைக் கொண்டு தலையை மறைத்துக் கொண்டேன். அடுத்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_டயரி.pdf/28&oldid=1149422" இலிருந்து மீள்விக்கப்பட்டது