பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 பூர்ணசந்திரோதயம்-2 பார்த்தால், தன்னை உப்பரிகைக்கு அழைத்து வந்த இரண்டு தாதிகள் இருக்கலாம் என்றும், அவர்களிடம் கேட்டு உண்மையைத் தெரிந்து கொள்ளலாம் என்றும் தீர்மானித்துக் கொண்ட அந்த அழகிய ரமணி லோபாவை விட்டு எழுந்து வாசற் கதவண்டை போய் அதைத் திறக்க கதவு வெளிப் பக்கத்தில் தாளிடப்பட்டுப் போயிருந்தது. அவள் கதவை இரண்டொருதரம் இடித்துத்தாதிகளைக்கூப்பிட்டுப்பார்த்தாள். எவ்வித மறுமொழியும் கிடைக்கவில்லை. அந்த மடந்தையின் மனதில் மிகுந்த கோபமும், சஞ்சலமும் பலவகைப்பட்ட எண்ணங்களும் உண்டாயின. அவள் உடனே அந்த இடத்தை விட்டுச் சுவரோரமாக நடந்து போய் வழி நெடுக இருந்த ஜன்னல்கள், வாசற் படிகள் முதலியவைகளின் அருகில் பேர்ய்ப் பார்க்க, எல்லாக் கதவுகளும் மூடி வெளியில் தாளிடப்பட்டிருந்தன. பூர்ணசந்திரோதயம் கரை கடந்த வியப்பும் கலக்கமும் கொண்டவளாய், இளவரசர் தன்னை அவ்வாறு அவமானப்படுத்த வேண்டிய காரணம் என்ன என்று எண்ணியெண்ணிப் பார்க்கிறாள். அவர் ஏதாவது கருத்தை மனதில் வைத்துக் கொண்டு அவ்விடத்தில் தன்னைச் சிறைப்படுத்தி இருக்கிறாரோஎன்ற சந்தேகமும் உண்டாயிற்று. வாசலில் வந்திருந்து தன்னை உப்பரிகைக்கு அழைத்து வந்த தாதிகள், இளவரசர் மேன்மாடத்தில் இருப்பதாகவும், தன்னை அவ்விடத்திற்கு அழைத்துவரச் சொன்னதாகவும் கூறியது நினைவிற்கு வந்தது. அவர்களும் ஒருவேளைபொய் சொல்லித் தன்னை அழைத்துக்கொண்டு வந்திருக்கலாம் என்ற யூகமும் தோன்றியது. எப்படியிருந்தாலும் இளவரசர் தன்னை அவ்வாறு வஞ்சித்து அவமானப்படுத்த மனங்கொள்ள மாட்டார் என்ற உறுதியும் உண்டாகிக் கொண்டிருந்தது. அவ்வாறு அவள் பலவாறு நினைத்துக் கவலைகொண்டு கோபத்தோடு அந்த ஹால் முழுதையும் ஆராய்ச்சி செய்துமுடித்துவிட்டு மனத் தளர்ச்சியடைந்து தான் அதற்குமேல் என்ன செய்வதென்பதை உணரமாட்டாமல் தத்தளித்து நின்ற சமயத்தில் அவள் கீழே