உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பூவையின் சிறுகதைகள்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை எஸ். ஆறுமுகம்

5

உலகத்தைக் கண்டு பயப்படுது. ஒட்டிவாடி குட்டி! நீயும் நானும் சேர்ந்து நம்ப முத்துலிங்கத்தை கைத்துக்கலாய்த் தூக்கி, ஒம்புட்டு வண்டியிலே வச்சு, ஆஸ்பத்திரிக்கு அழைச்சுபோய். நல்ல வைத்தியமாய்

பண்ணி வைப்போம். ம்... வா, புள்ளே, வா" என்று கொஞ்சினான்.

செம்பவளத்தின் ஸ்பரிசம் முத்துலிங்கத்தின் மேனியைத் தீண்டியதுதான் தாமதம்!

மறு இமைப்பிலே -

"ஐயையோ பவளப் பெண்ணே!" 物

அலறியவன் முத்துலிங்கம்.

அப்போது.

செம்பவளம் மாத்திரம் சிலையாகவில்லை.

முரடன் முத்தையனும் சிலையாகிவிட்டான். சிலை பேசவும் தொடங்கிவிட்டது. "செம்பவளப் பெண்ணே நடப்பு லோகத்துக்கு தக்கனை நானு சத்தியத்துக்குப் பயப்படாத முரடனாகவே வளர்ந்துப்புட்டேன். ஆனதாலே எனக்கு ஏத்த பொஞ்சாதியாக நீ ஒருநாளும் இருக்க ஏலாதாக்கும்! நான் வந்த தடத்திலே திரும்பிடறேன். மஞ்சிவிரட்டிலே எனக்கு கிடைச்ச கெலிப்பு என்னோட் முரட்டுத் தனத்துக்குக் கிடைச்சிட்ட கெலிப்பாகவே இருந்துப் புடட்டும்! ஆனா, அதே மஞ்சு விரட்டுல தோத்து போயிட்ட எந் தம்பி முத்துலிங்கத்துக்கு என்னோட கெலிப்பை வெற்றியை தாரை வார்த்துக் கொடுத்துப்புட்றேன். பாரத சண்டையிலே கர்ணமவராசரு யார்கிட்டேயோ தருமத்தையோ எதையோ தாரைவார்த்துக் கொடுக்கலையா, அது கணக்கிலே!

அப்பாலே, தம்பி முத்துலிங்கம் மஞ்சுவிரட்டுப் பந்தயத்திலே கெலிச்சவனாகே ஆயிடும். இல்லையா? ஒ. இந்த ஒரு நல்ல நினைப்பு இந்த முரடன் மனசிலே தோணுறதுக்குக் கூட, நீங்க ரெண்டுபேரும் மதிச்சுக்கிட்டு இருக்கிற அந்த தருமமான சத்தியமேதான் காரணமா இருக்குமோ? பவளம், ஒம் புண்ணியத்தாலே. நானும்கூட ஒரு மனுஷனாக ஆகிப்பூட்டேன் போலத்தான் தோணுது! பலே பலே பவளம், நீ உம் மச்சானை உன் ஆசைப்படி புள்ளையாட்டாம் நெஞ்சிலே சாய்ச்சிகிட்டு உன்னோட வண்டிக்கு ஒடியா எந் தம்பியைப் பார்த்தியா, பவளம்? எந் தம்பி எம்பேச்சுக்கு கட்டுப்பட்டு, என்னமாய் பொட்டிப் பாம்பாய் அடங்கிக் கிடக்கிறான் பாத்தியா செம்பளம்?