உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பூவையின் சிறுகதைகள்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6

பூவையின் சிறுகதைகள்

உம். அம்புட்டுதான்...! பூலோக ரம்பைக்குத் தெரியாத னிநோக்காடு கூடுதலாகாதாக்கும்! உன் அணைப்பு ஒன்னே போதும்,

வனை மறுபிறப்பு எடுக்கச் செய்யுறதுக்கு. என் தம்பி கொடுத்து

{j}

வைத்தவன் அதான் ஒன்றை எடுத்துகிட்டான், ஒங்க ரெண்டு பேரோட சுத்தமான சொப்பனம் பலிச்சிருச்சு ம். மெதுவா நட, நான் ஒடிப்போய் வண்டியைக் கட்டுறேன்! நான் கண்ட பாரத சண்டை பயாஸ்கோப்பிலே, கண்ண பரமாத்மாதேரை ஒட்டின சங்கதியை நான் எப்பவும் மறந்திட ஏலாதாக்கும்!..."

முத்தையனின் இடப்புறக் கண்ணின் முனையிலிருந்து கண்ணிர் வெளிச்சத்திலே மின்னிப் பளிச்சிட்டுச் சிந்தி சிதறுகிறது!

செம்பவளம் விம்மியபடி கையெடுத்துக் கும்பிடுகிறாள்!

ஈட்டிமுனை கொம்புகளில் காவிப்பூச்சு மின்ன, தலைநிமிர்ந்து நின்ற அந்த ஆலத்தாம்பாடிப் பூரணிச் செவலைக்கும் இப்போதுதான் போன உயிர் திரும்பியிருக்க வேண்டும்!......