உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பூவையின் சிறுகதைகள்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறுபடியும் மகாத்மா!

§

இ ந்திக் கன்னி மஞ்சள் பூசிப் பொட்டிட்டுப் புன்னகை செய்துகொண்டிருக்கின்றாள்: . . .

விடிந்தால், மகாத்மா காந்தி பிறந்த நாள்

'காந்தி மகாத்மா செத்து விட்டாரென்று எந்த பயல் சொன்னவன்?

சேரிச் சாம்பான் தனக்குத் தானாகவும், தன்னின் தானாகவும் சிரித்துக்கொண்டார். சிரிப்பின் அலைகளிலே, மாறிய காலத்தின் - ஊகூம், மாற்றப்பட்ட காலத்தின் அதிசயம் சலசலக்கிறது!

'ஆவணத்தாங்கோட்டைத் தேவர் குடியிருப்பிலேருந்து ஊருக்கு ஒசந்த பெரும்புள்ளியான கண்டிச்சீமைக் கங்காணி ஐயா இங்கிட்டு ரேக்ளாவிலே வந்திருந்தாக, வெத்திலை பாக்குப் போட்டுக்கிட்டாக, காந்தி விழா கைச்செலவுக்கு நூத்தியொரு ரூவா அசல் சலவைத் தாளவே தந்தாங்க. பொறக்குமாசத் தீவாளி விருந்துக்கு என்னைய பெரிய மனசு வச்சு அழைச்சிருக்காங்க, கும்பிடு கொடுத்தாக; கும்பிடு வாங்கிக்கிட்டாக, அப்பாலேதான். புறப்பட்டுப் போனாங்க!...'

'இம்மாங்கொத்த நிலைமையிலே, காந்தி செத்துப் பூட்டார்னு பல்லு மேலே பல்லுப் போட்ட எந்தப் புறக்குடிப் பயமவனாச்சும் செப்ப வாய்க்குமா, என்ன? - நெஞ்சின் ஈரம் கண்களில் தெரிந்தது. எட்டாக் கையிலே கிடந்த வெற்றிலைக்குட்டானை எட்டி எடுத்துவிட்டார். அதிலே கூட, அவருக்கு ஒரு பெருமை; பெருமிதந்தான்!

'என்னைத் தொட்டாக்கத் தீட்டு ஒட்டிக்கும்னு நல்ல காலம் இந்த வெத்திலைங்க மாஞ்சுமடியல்லே!... ப் பூவே! - இந்த