உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பூவையின் சிறுகதைகள்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை எஸ். ஆறுமுகம்

9


துப்பு ஒங்களுக்குப் புரியுமுங்க. நீங்க ஒசந்தவங்க; ஆனதாலேதான், ஈனச் செம்மங்களான எங்களையும் ஒசத்தப் பாடுபட்டீங்க.

நீங்க கண்ட கனாவோட நல்லது - கெட்டதைத் துல்லியமாய்ப் புரிஞ்சுக்கிடறதுக்கு ஏத்த சமயம் இதுதானுங்களே சாமி..? ஆனா, நீங்க எங்களையெல்லாம் தவிக்கவிட்டுப் போட்டுப் போயிட்டிங்களே? - பாளத்த பாவி ஒருத்தன் கண்ணை மூடிக்கிட்டு, ஒங்களைச் சுட்டுப்புட்டானே என்கிறதுக்காவ, நீங்களும் கண்ணை மூடிக்கிட வேணுங்களா, சாமியே?. ஐயையோ, தெய்வமே, எங்க தெய்வமே'

கிழவாடி இன்னமும் மதுரைவீரன் சிலையேதான்.

யாரோ கூப்பிட்டார்கள்.

ஊகூம், மூச்!

பணம் இருந்தும் மனம் இல்லாத - அதாவது, சமுதாயநலப் பற்றுதல் இல்லாத சமூகத் துரோகியை நினைவுகூர்ந்து நினைவூட்டிப் பிரகடனப்படுத்துகிற பாவனையில், மிக மிகப் பலவீனமாக எரிந்துகொண்டிருக்கிறது மண்ணெண்ணெய்ச் சிம்னி விளக்கு,

புகையிலை எச்சில் குமட்டிக்கொண்டு வரவே, சாம்பானுக்குச் சுயபிரக்கினையும் வந்தது. தலையைத் தாழ்த்தியவராகப் பத்திரமாகவே வெளியே வாசலுக்கு வந்தார். ஆத்தாடி... நல்லமூச்சு வந்தது. வாசல் கொட்டகையில் எத்தனை நெற்குதிர்களாம்!

"எம்புட்டு வாட்டி அலட்டுறதாம்?" என்று கோபப்படுகிற பாவனை செய்தபடி, வந்து நின்றாள் கிழவி.

"என்னையா கூப்பிட்டே, புள்ளே?"

"எனக்கு ஒடமை கொண்ட ஒங்களைக் கூப்பிடாம, மறுகா, யாரை கூப்பிடுவேனாம்?"

வாழ்க்கைத் தடத்தில் கிட்டத்தட்ட எழுபத்தேழு தொலைக் கற்களைத் தாண்டிவிட்ட பெரியவருக்கு இப்போதுதான் சிரிக்க வேண்டும் போலத் தோன்றியிருக்கலாம், பல் போனாலும், சொல் போகாத மானி மானஸ்தர். "எம்வூட்டு ஆசைப் பெண்டாட்டிக்குக் கோவத்தைப் பாருங்களேன், கோவத்தை" பொக்கை வாயில் புன்னகை பூவாக மலர்கிறது, மணக்கிறது.