உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பூவையின் சிறுகதைகள்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14

பூவையின் சிறுகதைகள்



வீசி எறிந்தார்; வெளிச்சத்தில் செய்திப் பத்திரிகையை மீண்டும்

புரட்டினார்.

வெளியே, அட்டகாசமாகவும், நிர்த்தாட்சான்யமாகவும் கை கொட்டிச் சிரிக்கிறது இருள்.

※ 漆 ※

?ᏜN /*

புது வீடு என்றால், சேரியைப் பொறுத்தமட்டில், அது சாம்பான் வீட்டைத்தான் குறிக்கும். சங்கராந்தியன்றைக்குப் புதுமனை புகுவிழா நடப்பதாக ஏற்பாடு, மின்சார இணைப்பு நடந்து முடிந்தால், முடிந்தது வேலை.

அங்கே, வேப்பந்துரடியில் இப்போது காந்த விளக்கு எரிந்தது.

காந்தி ஜயந்திக்கான முன் ஏற்பாடுகள் சுறுசுறுப்பா நடைபெறுகின்றன. .

விழாவின் நாயகரான காந்திஜிதான் முதன் முதலில் தயாரானவர்.

தோரணங்கள் கண்களைப் பறிக்கின்றன.

இசை உபகரணங்கள், கொம்பு தப்பு தாளம் என்று சர்வ சுதந்திரத்தோடு அணிவகுத்தன.

சாம்பானுக்குக் குடிக்காணியாட்சிப் பாத்தியதை கொண்ட தோப்புக்களினின்றும் வாழைத்தார்கள், மொட்டை வண்டிகளில் வந்திறங்கின; சுமங்கலிக்கோலம் ஏந்திய ஏந்திழைகளின் பாவனை பிரதிபலித்தது.

"அப்பாலே, இன்னம் என்ன சோலி மிச்சம் சொச்சம் இருக்குது, வேலப்பா? என்று அதிகாரத் தோரணையில் வினவினார் சாம்பான்.

"வெத்தலை-பாக்கு, சந்தனம் வாங்கனுமுங்க, பெரியப்பா" என்று மரியாதை பளிச்சிடப் பதில் சொன்னான் வேலப்பன். குடிச் சிறையிலிருந்து தன்னை விடுதலை செய்து, தன்னையும் தன் குடும்பத்தையும் காத்த புண்ணியவானுக்குக் காட்டுகின்ற நன்னி. அந்த மரியாதையில் முகம் பார்த்திருக்கலாம்.

"பிஸ்கோத்தும், மிட்டாயும் வாங்க வேணும்."