உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பூவையின் சிறுகதைகள்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16

பூவையின் சிறுகதைகள்



இன்னொண்ணு, நாளைய விழாவுக்குத் தலைமை தாங்கிறவங்களுக்கு" என்று விவரம் கூறினார்.

"பெரியவுக கூட்டத்துக்குத் தலைமை தாங்க யாரைப் போடப் போறாகளாம்" - அஞ்சலைப் பாட்டி,

"அக்கரைச் சீமையிலேயிருந்து இப்பத்தான் பிறந்த மண்ணை நாடி வந்து குதிச்சிருக்கிற நம்ம கண்டிக் கங்காணியைத்தான் போடலாம்னு ரோசிச்சிருக்கேன்! நம்ம ஆளுங்களுக்கு இது சம்மதமில்லைன்னா, மனசை விட்டுப் பயப்படாமல் சொல்லிப்புடலாம்; உங்க இஷ்டப்பிரகாரம் வேறே ஒருத்தரைப் போட்டுக்கிடலாம்!"

"அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லேங்க, நீங்க நல்லதைத்தான் செய்வீக அதிலே, நாயமும் கட்டாயம் இருக்கும்; ஆனபடியினாலே, கங்காணியையே உங்க மனசுப்படி விழாவை நடத்திச் தரச் சொல்லுங்க" பற்பல குரல்கள். ஒரே குருலாக ஒருங்கிணைந்து, ஒருமைப் பட்டு ஒலித்தன.

"சரி, சரி, காரியங்களைச் செஞ்சுக்கிட்டிருங்க, பசியாறிட்டு ஒடியாரேன், எங்க வீரமணி இப்பவாச்சும் திரும்பியிருப்பானோ, என்னமோ? சரி, சரி, நான் வரேன்"- புறப்படலானார் சேரித் தலைவர்.

வட்டிற்சோறு ஆவி பறக்கிறது; அகல் விளக்கின் சன்னமான ஒளியில், ஆவியின் புகை சன்னமாகச் சுற்றிச் சுற்றி அலைகிறது.

"உருட்டின சோத்துக் கவளத்தை லபக்னு வாயிலே போட்டுக்கிடாமே, நேரங்கெட்ட இம்மாம் பொழுதிலே கூட சொப்பனம் கண்டுக்கிட்டே இருந்தாக்க, அப்பாலே, ஒங்க மேனி என்னாத்துக்கு ஆகுமாம்? - அங்காளம்மை உரிமை பூண்ட உறவில் வருந்தினாள். -

"வாழ்க்கையே சொப்பனம்தான் அப்படின்னு ஒரு சித்தர் பாடியிருக்கார்; அந்தச் சொப்பனத்தையே வாழ்க்கையாக்கி விளையாட வேணும். விளையாட்டுக்காட்ட வேணும்னுதான் நான் சதா சொப்பனத்திலே மூழ்கிக் கிடக்கேனாக்கும்!"

சோற்றுக் கவளங்கள் விரைந்தன.