உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பூவையின் சிறுகதைகள்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18

பூவையின் சிறுகதைகள்



"வாயைத் தொறந்து பேசுடா, எந் தங்கமே!’-தாய் அலறுகிறாள்; கதறுகிறாள். -

"அப்பாரே, கேட்டுக்கிடுங்க, நடப்புப்படி சொல்லுறேன். அடிநாளையிலே, நானும் நம்ம கங்காணி ஐயா மகள் செண்பகமும் காளி ஆயி ஒழுங்கை மணலிலே கமுக்கமாகச் சந்திக்கக்கிட்டு, மணல் வீடு கட்டி, புருசன் பெண் சாதி விளையாட்டு விளையாடுவோம். ஒன் ஃபைன் மார்னிங்.. ம்... வந்து. ஒரு அழகான காலைப் பொழுதிலே, அது மாதிரியே நானும் செண்பகமும், புருஷன் பெண்டாட்டி விளையாட்டு விளையாடினப்ப, எங்களுக்குள்ளே சண்டை மூண்டிடுச்சு; கணவன் மனைவின்னா, சண்டை சச்சரவு வாராமல் இருக்குமுங்களா? இருக்கலாமுங்களா? எங்களுக்குள்ளாற சண்டை வந்ததாலே, என்னோட அது செண்பகம் டு, போட்டுடுச்சு! ... ஆனா, - அந்தச் சம்பவத்துக்குப் பிறகு, நானும் செண்பகமும் சந்திக்கவே வாய்க்கல்லீங்க; அது அக்கரைச் சீமைக்குப் போயிடுச்சு. இப்ப, நானும் படிப்பை முடிச்சு இங்கிட்டு பிறந்த மண்ணை மிதிச்சேன், செண்பகமும் இப்ப திரும்பிடுச்சு, செண்பம் பிஞ்சுப் பிரயாத்திலே என்னோட டு போட்டுட்டுப் பிரிஞ்ச அந்தத் துயரத்தை இன்னைக்கு வரைக்கும்கூட, என்னாலே மறக்கவே முடியல்லீங்க! அந்தத் துன்பம் என்னோட அன்பான நெஞ்சிலே, செண்பகம் கொலு இருக்கிற என்னோட பாசம் மண்டின மனத்திலே ஒரு வடு கணக்கிலே ஏற்பட்டு உறுத்திக்கிட்டே இருந்திச்சு. அதனாலே, எப்பாடு பட்டாச்சும், செண்பகத்தை சமைஞ்சு பக்குவமடைஞ்சிட்ட செண்பகத்தைக் கண்டு பேசி, என் கூட புோட்டிருந்த டு வைக் கலைச்சு என்னோடே அந்தச் செண்பகத்தை ராசி ஆகிப்பிடச் செஞ்சிட வேணும்னு தீவிரமான வைராக்கியம் கொண்டேன்; என் ஆசை கூடிவந்திச்சு காலமும் கை கூடிச்சு: செண்பகத்தைச் சந்திச்சேன், அந்தியிலே; என் மனசைத் திறந்து காட்டினேன், செண்பகம் ஆனந்தக் கண்ணிர் விட்டுச்சு! வீரமணி! ... நீங்களும் நானும், புருஷன் பெண்சாதி விளையாட்டு, விளையாடினப்ப, நான் உங்களோட டு போட்டேன்; இத்தனை வருஷம் கழிச்சு நான் உங்க கூட போட்ட அந்த டு வைக் கலைச்சு நான் உங்களோட ராசி ஆகணும்னா நீங்களும் நானும் மறுபடியும் நிஜமாகவே புருஷன் பெண்சாதி ஆகிப்புட வேணுமாக்கும்! என்று செருமிச்சு என்னோட நெஞ்சத்துக் கனவை இனம் புரிஞ்சுகிட்டாப்பிலே, அது அந்தச் செண்பகம் பேசினதும், நானும் அப்பவே சரி ன்னு என் சம்மதத்தைச்