உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பூவையின் சிறுகதைகள்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை எஸ். ஆறுமுகம்

19



சொல்லிட்டேன்! செண்பகம், வானத்துக்கும் பூமிக்குமாகக் குதியாட்டம் போட்டுச்சு, டு கலைஞ்சுது, நாங்க ரெண்டு பேரும் 'ராசி ஆனோம்! ... மகமாயி சந்நிதியிலே நானும் செண்பகமும் விதியையே சாடிட்ட பெருமிதத்தோட ஜோடியாய் நின்னு கும்பிடு போட்டுக்கிட்டிருந்தோம்! அப்பத்தான், மகளைத் தேடிக்கிட்டு வந்தார் எங்க ஒசத்தியான கங்காணி! அவரேதான் இப்படி என்னை சவுக்குமிளாறினாலே அடிச்சுப் போட்டார்! செண்பத்தோட கண்ணிருக்காக, என்னோட செண்பத்தோட அந்தப் புனிதமான உயர்வான சத்தியமான தருமமான அந்தக் கண்ணிருக்காக நான் மெளனப்பிண்டம் ஆயிட்டேன். கங்காணிக்கும் 'மாப்பு' கொடுத்தேன். வினாத் தெரிஞ்ச காலந்தொட்டு, என் நெஞ்சைத் தொட்டு, என் நெஞ்சிலே கண்கண்ட தேவதையாகக் குடியிருக்கிற அந்தப் பரிசுத்தமான நெஞ்சைச் சுமந்துக்கிட்டு இதோ, உங்க சந்நிதானத்திலே வந்து நிற்கிறேனுங்க அப்பாரே'

வாழ்ந்து காட்டிய சேரிச் சாம்பானின் குழி விழுந்த கண்களின்றும் கண்ணிர் முத்துக்கள் குழி பறித்துச் சிந்தின.

அது ஆனந்தக் கண்ணிர்!

மாட்டுத் தொழுவத்திலிருந்து பிணைக் கயிற்றைக்

கட்டறுத்துக்குக் கொண்டு வெளியே ஒடி வந்து குதித்தது செவலைக்கன்று.

பாதிச் சோற்றோடு எழுந்த சாம்பான், கை கழுவியானதும், நேராகக் காந்தி அண்ணலைச் சந்தித்தார். அண்ணலின் திருச்சந்நிதியில், அகல்ஒளியில் மண்டியிட்டார். காலடியிலே திருக்கை வார் மண்டியிட்டுக் கிடந்தது.

"மகாத்மா! நீங்க வேடிக்கையான இந்த மனுசங்களோட நெஞ்சுகளிலே விதைச்சிட்டுப்போன அன்புவித்து இப்ப அபூர்வமாய், அதிசயமாய் மூளை கிளம்ப ஆரம்பிச்சிடுசின்னுதான் தோணுது!... கேட்டீங்களா, எங்க வீரமணியோட கதையை?... அன்புக்குச் சாதி இல்லே, மதம் இல்லே அப்படி இப்படின்னு நீங்க ஏகமாச் சொல்லிட்டீங்க பரிசுத்தமானது நியாயமானது யதார்த்தமானது என்கிறதுக்கு இந்தப் பறைச்சாம்பான் மகன் வீரமணியும், அந்த ஒசந்தகுடிக் கங்காணி மகள் செண்பகமும் சாட்சியாய் நிற்கிறாங்க!