உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பூவையின் சிறுகதைகள்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20

பூவையின் சிறுகதைகள்



ஆனா, கங்காணிக்குப் புத்தி சொல்லிக் கொடுக்கிறதுக்கு, நீங்க இப்ப இருந்திருக்கப்படாதுங்களா? ... ஐயாவே, என்ன கமுக்கமாய்ச் சிரிக்கிறீங்களே?. ஒ, எங் காலடியிலே கிடக்குதே, அந்தத் திருக்கைமீன் வாரைக் கண்டா, அப்படிச் சிரிக்கிறீங்க?... என் மகனை அடிச்சவன் எந்தக் கொம்பனாக இருந்தாலும், அவனைப் பதிலுக்குப் பதில் அடிக்காம விடவே மாட்டான் இந்தச் சாம்பான்! ஆனா, நீ பாடம் சொல்லித் தந்திருக்கிற அந்த அன்புதான் என் கைரெண்டையும் கட்டிப் போட்டுப்புடுச்சீங்களே, சாமியே?. இப்ப, இந்த ராத்திரி வேளையிலே, நானும் எம்மகனும் அந்த உயர்வான கங்காணி பங்களாவுக்குப் புறப்படுறோம்; உங்களையும் உங்க அன்பையும் துணையாய்க் கொண்டுதான் புறப்படுறோம்! போயிட்டு வாரோமுங்க தெய்வமே'

வீரமணியின் அழகான கண்களில் கண்ணிர் நிறைகிறது.

இருதலைமணியன் பாம்பு மாதிரி சுருண்டு நெளிந்து கிடந்த திருக்கை மீன் வாரை, துரர வீசி எறிந்தார் சாம்பான், "மகனே! புறப்படு!"என்றார்.

"நானும் வாரேனுங்க, மச்சான்காரரே'

“ഉ്”

பட்டி வண்டி புறப்பட்டது.

※ ※ ※

கண்டிக் கங்காணியன் பேரழகுப் பெருமனையின் தலைவாசலில்,மின்னொளி வெள்ளத்தில், மக்கள் நெரிந்தனர்.

புறப்படத் தயாராக நின்ற கங்காணியின் ரேக்ளா வண்டிக்குக் குறுக்கே பாய்ந்து நின்றது சாம்பானின் பெட்டி வண்டி,

"அடடே, சாம்பானா? வாங்க! வாங்க!" என்று வரவேற்றார் கங்காணி. "உங்களைத் தேடித்தான் இப்ப புறப்பட்டுகிட்டு இருந்தேன்"என்று தொடர்ந்தார்.

"என்ன விசயம், சொல்லுங்க"- சாம்பானின் பேச்சி நெருப்பு துTள் பறந்தது.

"நீங்க வந்த விசயத்தை முன்னாடி சொல்லப்புடாதா?

"காந்தியோட பிறந்த நாள் கொண்டாட்டச் செலவுக்காக நீங்க நன்கொடையாய்க் கொடுத்த நூத்தியொரு ரூபாயை உங்ககிட்டவே