உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பூவையின் சிறுகதைகள்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22

பூவையின் சிறுகதைகள்



காந்திஜியின் பிறந்த நாள் விழா கோலாகலமாக நடைபெறுகிறது.

தாயின் மணிக்கொடியின் பட்டொளி நிழலில் கொலு வீற்றிருந்தார் அண்ணல் காந்தியடிகள்.

விழாத் தலைமையாளர் கண்டிச் சீமைக் கங்காணி எழுந்தார்; காந்திஜிக்கு உணர்ச்சிவசப்பட்ட நிலையில் மாலை அணிவித்தார். திரும்பினார். "மகாஜனங்களே! ஊர் உலகத்தைப் போலே நானுந்தான் காந்தி செத்துப் போயிட்டார்னு நம்பிக்கிட்டிருந்தேன்; ஆனா, காந்தி செத்துப் போயிடல்லே என்கிற ஒரு சத்தியமான உண்மையை நேத்து ராத்திரிதான் நான் புரிஞ்சுக்கிட்டேன்? இந்தப் புதுப் பாடத்தைச் சொல்லிக் கொடுத்தவளே என்னோட அருமைப் பொண்ணு செண்பகம்தான் திருவாளர் சாம்பான் அவர்களின் மகன் வீரமணிக்கு சொந்தமாவது என் மகள் செண்பகத்தின் உயிர் என்கிற தெய்வ நீதியையும் நான் தெரிஞ்சுக்கிட்டேன்! என்னோட வீட்டிலேயிருந்து இந்தக் கலியாணத்தை நான் நடத்தி வைக்கவேணும்னா, காந்தி மகாத்மா மறுபடியும் புதிதாகப் பிறந்துதான் தீரனும்! ஆனதாலே, நானும் சேரிவாசிகளிலே ஒருத்தனாக மாறி, இந்தக் கலியாணத்தை, காந்தி பிறந்த இந்தப் புனித நாளிலே நடத்தி வைக்கப் போறேன். அன்பு உள்ளம் கொண்ட உண்மையான காந்தி பக்தர்கள் புது மணத் தம்பதியை அன்போட வாழ்த்தும்படியும் கேட்டுக் கொள்கிறேன்!"

அவர்கள் மட்டுமா வாழ்த்துகிறார்கள்.