உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பூவையின் சிறுகதைகள்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை எஸ். ஆறுமுகம்

2

5

கண்மூடி மெளனியாக மகிழ்ந்த அவனது ரசனை மனம் வாசனை மல்லியாய் மணக்கிறது.

என்னவோ சத்தம் கேட்டது.

ஒலவக்கோடு!

பின்சாமம் கொடிகட்டி உறங்கிய சமயம் அது என்றாலும், 'ப்ரயாணம் விழித்திருக்க வேண்டாமா?

கிழவி ஒருத்தி இறங்கினாள்.

எங்கோ ஒர் இடம் காலி ஆகியிருக்கக்கூடும்.

'ஞான் சோதிக்கட்டே?

'ஐய்யடா'

இடப் பிரச்சினையில், பீடிகளின் முணுமுணுப்புகள் வந்த சுவடு தெரியாமலே தேய்ந்து விடுகின்றன.

காலியான இடம் அவனுக்காகவே காத்திருக்கவேண்டும்; முண்டியடித்துக் கொண்டு முன்னேறியவன், சரணம் சாமியே, ஐயப்பா என்று சோர்ந்து உட்கார்ந்தான். நாவறண்டது; கோயம்புத்துர் சந்திப்பில் காப்பி சாப்பிட்டதோடு சரி. காலாறத் தரையிலே கால் பாவி நின்று காப்பியைச் சுவைத்தும் ருசித்தும் குடித்துக் கொண்டிருந்த நேரத்தில், அவன் உள்மனத்தில் ஆழமாகவே பதிந்து விட்டிருந்த சுதந்திர தினவிழாக் காட்சிகள் மறுபடி சட்டை உரித்துக்கொண்டு படம் எடுத்தன; படம் காட்டின. ஜங்ஷ்னில் கண்டெடுத்துப் பத்திரப்படுத்தின தாயின் மணிக்கொடி, மற்றும் காந்தி மகாத்மாவின் படங்கள் சட்டைப் பையில் இப்போதும் உறுத்தவே செய்கின்றன. ஊம்:

சாயா வந்தது.

பைசா போனது.

ரயிலுக்குக்கூட பூங்குயிலாகக் கூவத் தெரிகிறது.

அவன் இப்போது நல்ல மூச்சு விட்டான். சென்னைக்கும் கொச்சிக்குமாக எத்தனை தரம்தான் கூடுவிட்டுக் கூடுபாய்ந்து கொண்டிருப்பான் அவன் 'விடிந்தால், எல்லாமே விடிந்துவிடும்' அசலான விதியைப் போலவே, அந்நியமான அவனுக்கும் சிரிக்கத்