உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பூவையின் சிறுகதைகள்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை எஸ். ஆறுமுகம்

27



மெய் உணர்ந்தான். rணப்பித்தமான குற்ற உணர்வுக்காகக் கழிவிரக்கம் கொண்டு, நேத்திரங்களை வேறுபுறம் திருப்பினான்.

அங்கே:

யாரோ ஒரு சிர்ப்பக்காரன் இன்னமும் அந்தக் காட்சி யைக் கண்காட்சியாக்கி ரசிப்பதில் லயித்திருக்கிறானே... ? எதிர் ஆசனப்பலகையில், தலையும், காலுமாக நீட்டிக் கிடந்த அந்தப் பெண்ணின் அந்தத் தாயின் கால் மாட்டில் நின்றுகொண்டிருந்த அந்த இளவட்டம். பிரயாணச் சாதனங்கள் வைப்பதற்குப் பயன்பட்டுப் பயனளிக்க வேண்டிய பலகையின் விளிம்பிலே இரு கைகளையும் ஊன்றி அணை கொடுத்தவனாகக் காட்சியளித்தான். அவனுடைய முகத்தில் நிழலாடிய மோக வெறி கூடுதல் அடைந்துகொண்டே இருந்தது.

சே..!

உடம்பில் உறைந்திருந்த தணிப்பு மாறி, 'சூடு உறைக்கவே, கனைத்தான் அவன்.

மூச்!... அந்த் வெறியனுக்குச் சொற்பமாவது பேடி உண்டாக வேண்டாமோ? ...பேடி அவன் ஆத்திரப்பட்டான். 'சுத்தத் தள்ளிப்பொளி:

அழகான தாயின் பூங்கரங்கள், அவளுடைய கச்சையின் பூவிலங்காக அமைந்த அடி முடிச்சை அத்தனை துர்க்கக் கலக்கத்திலும் ஞாபகமாக இறுக்கிக்கொள்வதில் முனைந்தன; கண்கள் இன்னமும் விழித்துக்கொள்ளவில்லை. பிள்ளையைப் படுக்கை ஒண்டலில் மாற்றிக்கிடத்திவிட்டு, அவளும் இப்போது மாறிக் கிடக்க எத்தனம் செய்தாள். முண்டு சீர் அடைந்து சீர் பெற்றது. கஞ்சமலர்ப்பாதங்கள் சேலைக்கரையில் ஒளிந்துகொண்டன.

ஒ...!

எவ்வளவு நாணயமான அழகோடு அவள் தரிசனம் தருகிறாள். அந்த அழகை நிதர்சனமான அழகென்றும் சொல்லவேண்டும்! அவன் எண்ணமிட்டான். குழற்கற்றையில் மூன்றாம்பிறையாகப் பூத்து மணம் பரப்பிய மல்லிகைப் பூச்சரம் எத்துணை கம்பீரமான தருமத்தோடும், சத்தியத்தோடும் அவளுடைய மாண்புமிக்க அழகைப் பிரகடனப்