உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பூவையின் சிறுகதைகள்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிடிடுக்கு டி

மு. மந் ஆனந்த நடராஜ மூர்த்திக்கு நவராத்திரி வந்துவிட்டதென்றால், கூத்தும் கொண்டாட்டமுமே ! நவராத்திரியின்போது, அந்த ஒன்பது நாட்களிலும் நாளைக்கோர் அலங்காரமும், வேளைக்கோர் ஆராதனையுமாக ஏற்பான் அவன். அவன் 'கால் மாறிக் குனித்தவன் அல்லவா? ஆண்டவனின் மகிழ்ச்சி வெள்ளம் அந்தக் கோயில் மடத்திலே ஆனந்த வெள்ளமாகத் திரை எழுப்பி, துரை எழுப்பிப் படர்ந்து பரவும்; பரவி ஓடும்.

ஆண்டவனுக்குக் குது.ாகலமென்றால், ஆளப்பட்ட ஊருக்கும் ஊர் மக்களுக்கும் அந்தக் குதுகலத்தில் பங்கு இருப்பது இயல்புதான். ஆகவே, நவராத்திரித் தருணத்தில் பூவைமாநகர் விழாக்கோலம் ஏற்கும்.

இந்தப் பூவைமாநகரிலே பசை மிக்கது செட்டித் தெரு, ஊரோடு ஊராகப் பசையாக ஒட்டிக்கொண்டது இது. இங்கே செட்டி மார்கள் ஒரே இனம். ஆனால் அவர்களுக்குள் 'புரப் பிரிவுகள் மட்டும் பல உண்டு. இவற்றுள், 'ஆதியான் செட்டியார் புர' த்தவர்களுக்குக் குடிக்காணியாட்சிப் பாத்தியதை கொண்டது இந்த நடராஜர் மடம். ஆதியில் மடமாகத் சுத்தப் பிரனானின் படத்தை மட்டிலுமே கொண்டு விளங்கியது. இப்போது கோயிலாகிவிட்டது. நியமப்படி பூசனைகள் துாபதீபம் ஏற்று நடக்கும். -

இத்தகைய பரம்பரை, வழிபாட்டில் நவராத்திரிக் காப்புக் கட்டும், கடைசி நாளன்று நிகழும் வெள்ளி ரதப் பவனியும் எடுப்புமிக்கவை. முதலும் இறுதியுமான இவ்விரு நிகழ்ச்சிகளுங்கூடக் கோயிலை அடிமை கொண்டவர்களுக்கே உரிமை பூண்டிருந்தன. ஏனைய விழாக்கள், பண்டைய மரபுப்பிரகாரம் ஆளுக்கொரு மண்டபப் படியாக உபயம் ஆகும்.

பின், கூத்தன் கூத்தாடக் கேட்பானேன்?

ゞ警な N?.' M*/ % ※ *蘇N めás /&N