உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பூவையின் சிறுகதைகள்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை எஸ். ஆறுமுகம்

33


இனம்புரிந்த தவிப்பும் இனம் புரியாத கலக்கமும் ஆண்டு நிற்க, "அம்பலவாணன் செட்டியாரும் வந்துட்டாராப்பா? என்று கேட்டார் ஒதுவார்.

ரங்கன் கைகளை அகல விரித்தவாறு, "ஊகூம்; இல்லீங்களே! அவர் மட்டுந்தான் பாக்கி" என்று தாழ் குரலில் விடை சொன்னான்.

'தெய்வமே?

ఎడ *g ズめ* マ&s ア総

•క్ట

No.ఎడ

புரட்டாசிக் கெடுவில் வாடைக்குப் பஞ்சம் இருக்குமோ? இருக்கலாமோ?

ஒதுவார் பற்றறுத்த துறவியைப் போலே மயில்கண் துவாலை மார்புக்குக் குறுக்கு வசத்தில் புரள நெற்றிப் பட்டைகளும் தாமுமாகக் கைப்புறம் படிந்த காகிதக் கற்றைகளோடு நடை ஒற்றிவந்தார்.

"வாங்க ஐயா! ஐயா வாங்க?"

உலகம் பலவிதம் என்கிற சித்தாந்தத்துக்குச் சாட்சியம் அளிக்க இப்போது ஒலி பிரிந்து குரல் ஈந்த சத்தபேதங்களே போதும்.

"ஆமா" என்று சொல்லித் தலையை உலுக்கி, கும்பிட்ட கரங்களுக்குப் பதில் கும்பிடு கொடுத்துக் கொண்டே விரிப்பில் சம்மணம் கோலி அமரலானார் ஒதுவார். ஒதுவாரென்றால், சுந்தரமூர்த்தி ஒதுவார் எனப் பொருள்.

"ஐயாவோட பூர்வாங்க அலுவலெல்லாம் கை கூடி முடிஞ்சிருக்கும்னு நினைக்கிறோங்களே."

சொன்னவர் தீனாரூனா : அதாவது திருவம்பலம் செட்டியார், பல்போனாலும் சொல் போகாத பழுத்த பழம்.

"வாஸ்தவந்தான். என் கடன் பூராவும் மாமூல் பிரகாரம் முடிஞ்சாச்சு!" மென்மைத் தன்மை நிரக்கக் கூறினார் ஒதுவார்.

"ஐயா, மண்டபப்படிக்கான முறிச்சீட்டுக்களையும் சாமான் சிட்டங்களையும் உடையவங்ககிட்டே சேர்ப்பிச்சுக் கையொப்பம் வாங்கிக்கிடுங்க. விடிஞ்சானதும், சாமியைக் கொலு ஏற்றத்துக்குண்டான காரியங்களைக் கவனிக்கலாம்!" என்றார் பாகவதர் கிராப் விடலை,