உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பூவையின் சிறுகதைகள்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38

பூவையின் சிறுகதைகள்


அப்போது

"ஐயோ!"

புதிய குரலொன்று எதிரொலித்தது.

எல்லோரும் பார்வைகளைத் திசைமாற்றினார்கள்.

யாரோ ஒரு பண்டாரம் மொட்டைத் தலையும் திருநீற்றுப் பூச்சும் ருத்திராட்ச மாலையும் பொலியக் காட்சி தந்தார்.

"யோவ்! இது ஆண்டி மடம் இல்லே; கோயில் மடம்! இங்கிட்டுப் பிச்சை போட மாட்டாங்க ஊருக்குள்ளே போய்ப் பாருங்கானும்!" -

கடுக்கண் வைரக் கடுக்கன் ஆயிற்றே! அது ஏழரைக் கட்டைச் சுருதியில் ஆணையிட்டது.

அந்தப் பண்டாரம் ஏன் அப்படிச் சிரிக்க வேண்டும்? உலகாளும் ஆண்டவனே ஒரு கட்டத்திலே "பிச்சை ஆண்டி"யாக வேடம் புனைய நேர்ந்த விதியை நினைத்திருப்பாரோ?

ஒதுவார் மலைத்தார்.

  1. 4

ஐயா, பிச்சைக்காக நான் இப்போது இங்கு வந்து நிற்கவில்லை!"

"ನಿನಡಿಎ?

"இங்கே சுவாமிக்குப் பூஜை பண்ணுகிற ஒதுவார் ஒருத்தர் இருக்காராமே, அவர் யார்? எங்கே இருக்கார் அவர்?" என்று விசாரித்தார் ஆண்டிப் பண்டாரம்.

"ஏன் நான்தான்" என்று சொல்லிக்கொண்டே முன்னே வந்தார் ஒதுவார். பண்டாரத்தைக் கூர்ந்து பார்த்தார். ஏக்கமும் ஏமாற்றமும் நிழலிட, "சுவாமிகளே, சுவாமி சந்நிதியிலே இப்படி உட்காருங்க" என்று உருக்கமாக வேண்டினார். "என்ன விஷயமுங்க, ஐயா?" என்று கேட்டார்.

விளக்குடையான் கழலடியில் நின்ற தூண்டாமணி விளக்குச்சுடர் தெறித்தது. x

பண்டாரம் திருவாய்மலர்ந்தார் : "ஐயா, இவ்வூரைச் சேர்ந்திருந்த அம்பலவாணன் செட்டியார் என்பர் தம்மோட 'பிட்டுக்கு