உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பூவையின் சிறுகதைகள்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை எஸ். ஆறுமுகம்

39


மண் மண்டப்படித் திருவிழாவை வழக்கம் போலவே விமரிசையாக நடத்தச் சொல்லி உங்ககிட்டே இந்த இருநூற்றைம்பது ரூபாயைச் சேர்ப்பிக்கச் சொன்னார். இந்தாங்க பணம்! என்னிச் சரிபார்த்துக்கிடவேணும்!"

ஒதுவார் மேனி சிலிர்த்தார். பணத்தை நடுங்கும் விரல்களால் சரி பார்த்து இடுப்பு மடியில் வைத்துக் கொண்டார். "அந்தத் தர்மசீலர் நல்லபடியாக இருக்காரல்லவா?" என்று ஆர்வத்துடன் உணர்ச்சி வயப்பட்டு விசாரித்தார்.

"ஊம்" கொட்டினார் பண்டாரம்,

"எங்கே இருக்கார் அவர்" "எங்கேயும் இருப்பவர் ஐயா அந்தப் புண்யவான்."

"தம் மோட மண்டபப்படி விழாவன்றைக்காகினும் அம்பலவாணன் செட்டியார் வருவாரா, சுவாமிகளே?" மனிதாபிமானத்தின் ஆர்வம் பிடர்பற்றித் தள்ள விசாரித்தார் சுந்தரமூர்த்தி.

"வருவார்னு தோணலிங்க!" என்றார் ஆண்டி

"அட கடவுளே! தெய்வம் அவரை மறந்திடுச்சே என்கிறதுக்கா, அவரும் மறந்திட்டாரா என்ன? ஐயோ! என்ன சோதனை இது? நடராஜப் பிரபோ!"என்று உருகிக் கரைந்தார் அர்ச்சகர்.

"ஐயா, தெய்வம் அவரை மறந்திடுச்சு என்பதோ, அல்லது அவர் தெய்வத்தை மறந்திட்டார் என்பதோ இந்தப் பொய்யான வாழ்க்கையிலே நமக்கு நாமே கற்பிதம் செய்து கொள்ள வேணுமானால் உபயோகப்படலாம். ஆனா, மெய்யாகவே ஆளுகிறவனுக்கும் மெய்யாகவே ஆளப்படுகிறவனுக்கும் ஊடாலே இப்படிப்பட் பொய்யான மயக்கங்கள் செல்லாக் காசுக்குச் சமதைதான். தெய்வசித்தம் என்கிற ஒரு மகத்தான மாயசக்திக்கு முன்னே நாமெல்லாம் எம்மாத்திரம், இந்தக் கட்டை'க்கு நாழி ஆகுது. விடை வாங்கிக்கிட வேணும், ஐயா" -

பண்டாரத்தின் விழிகள் பொங்குகின்றன.

stడ చేá వడ ఎడ Zhy # ve's ※