உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பூவையின் சிறுகதைகள்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்வில் சாந்தி இன்பம் என்பன எல்லாம் தாமரை இலையின் ஒளிரும் நீர்த்திவலைகள்தான் என்பதைக்கூறும் 'பிள்ளைக்கனி அமுதம்:

குடுபம்பப்பாசம் மற்றும் பர்மீயச்சூழ்நிலை ஆகியவற்றின் விளக்கமாக ‘செந்தட்டி மம்மே பாரே'

திருமணங்களில் எதிர்பாராத திருப்பங்களை எடுத்துரைக்கும் 'வாழப்பிறந்தவள்’

கடன் கொடுத்தவருக்கும், வாங்கியவருக்கும் உள்ளம் உண்டு என்பதை பறைசாற்றும் 'குழந்தை உள்ளம்’

மணாளனை நிர்ணயிக்க பரிசல் பந்தயம் ஒரு வழி என்பதை விளக்கும் போட்டா போட்டி' ஆகிய கதைகள் இடம் பெற்றுள்ளன.

இக்கதைகள் எளிய நடையில் எழுதப்பட்டிருந்தாலும் அவற்றில் "இந்த லோகத்திலே இப்பைக்கு வேசம் போடுறவங்காதான் மிஞ்சிகிட்டு លទ្ធិទំឲ".

"மகாத்மா நீங்க வேடிக்கையான இந்த மனுசங்களோட நெஞ்சுகளிலே விதைச்சுட்டுப்போன அன்பு வித்து இப்ப அபூர்வமாய் அதிசயமாய் முளைகிளம்ப ஆரம்பிச்சுடுகின்னுதான் தோணுது”

"கோயிலுக்கு அடிமைப்பட்டவர்கள் இப்பொழுது மெளனத்திற்கும் அடிமைப்பட்டார்கள்"

"மனம் ஒரு குழந்தை; எடுப்பார் கைப்பிள்ளை. எடுப்பவர்கள் குழந்தை வசம் மனமிழக்கலாம். அதே சமயம் குழந்தை, எடுப்பவரைப்பற்றி அந்நிலையில் தீர்ப்பு, நிர்ணயம் செய்கிறதோ? யார் அறிவார்கள்?"

"விதிக்கு மருந்து இல்லையாம். வினைக்கும் மருந்து இல்லையா?" என்பன போன்ற சிந்திக்கச் செய்யும் கருத்துக்களும் ஏராளமாகவே பிணைக்கப்பட்டிருக்கின்றன.

மேலும் நடைஎளிதாக இருப்பினும் ஆங்காங்கே "இம்மாங்கொத்த நிலையிலே காந்தி செத்துபூட்டார்னு பல்லு மேலே

பல்லு போட்ட எந்த புறக்குடிமவனாச்சும் செப்ப வாய்க்குமோ என்ன?"

"உருட்டின சோத்து கவளத்தை லபக்னு வாயிலே போட்டுக்கிடாம நேரம்கெட்ட இம்மாம் பொழுதிலேகூட சொப்பனம் கண்டுகிட்டே இருந்தாங்க"

"என்ன நடந்திச்சு அவுகளுக்கு"

IV