உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பூவையின் சிறுகதைகள்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நேற்று என்பது நிஜமில்லை .... இன்று என்பது இறுதியில்லை . நாளை என்பது நம்பிக்கையில்லை ...

- என்ற நிலைப்பாட்டின் தொடர்ச்சியாகவே மனிதர்களின் வாழ்க்கைப் பயணம் தொடர்கிறது.

மனித நேயமிக்கவர்களின் உறவு முறையையும், வாழ்க்கை முறையையும் கிராமிய மண்ணின் பின்னணியோடு எதார்த்த நடையில் கதைகளாக உருவாக்குவதில் எனது தந்தையார் அமரர் பூவை எஸ். ஆறுமுகம் அவர்கள் தனிமுத்திரை பதித்துவந்துள்ளார் என்பது இலக்கிய உலகம் அறிந்த உண்மையாகும்.

அவரது வாழ்நாளின் நீண்ட நாளைய கனவு, பதிப்பகம் ஆரம்பித்து அவரது கதைத் தொகுப்புகளை வெளியிடவேண்டும் என்பதாகும். அவர் இருந்த வரையில் சந்தர்ப்ப சூழ்நிலைகள் சாதகமாக அமையாத காரணத்தால் நிறைவேறாத அவரது கனவு, இதோ... இப்போது நிறைவேறியுள்ளது.

பல்வேறு பிரபலமான வார இதழ்களில் வெளியாகி, ஏராளமான வாசகர்களின் பாராட்டுக்களைப் பெற்றுள்ள சிறுகதைகளின் தொகுப்பாக இந்நூல் உங்கள் கைகளில் தவழ்கிறது.

எனது தந்தையார் எழுதிய "இதோ, ஒரு சீதாப்பிராட்டி" என்ற தமிழக அரசின் பரிசு பெற்ற நாடக நூல் "இன்னொரு சீதை" என்ற பெயரில் சென்னை தொலைக்காட்சியில் 17 வார தொடராக ஒளிபரப்பானபோது அத்தொடரை இயக்கிய பிரபல தொலைக்காட்சித் தொடர் இயக்குநர் திரு. கா.பரத் அவர்கள் வசனம் எழுதும் வாய்ப்பினை எனக்கு வழங்கிச் சிறப்புச்சேர்த்தார்.

இப்போது எனது தந்தையாரின் சிறுகதைகளை தொகுத்து வெளியிடும் பெருமை இந்நூல் மூலமாக எனக்கு கிடைத்துள்ளது.

எனது வளர்ச்சி மீது அதிக ஆர்வம் கொண்டுள்ளவரும்,

எனது தந்தையாரின் நீண்ட நாளைய நண்பருமான பெரியவர்

திருமிகு துரை ராமு அவர்கள் என்னுடைய முதல் நாடகமான "சபையிலே

VI