உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெஞ்சமின் ஃபிராங்ளினின் நம்மைமேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

42

பெஞ்சமின் ஃபிராங்கிளின்

வாறு அழிகின்ற காலங்களில் அந்த பயிர் இனங்களுக்கு ‘ஆபத்து உதவி நிதி’ என்ற பெயரில் இன்சூரன்ஸ் செய்து, கொள்ள வேண்டும் என்ற யோசனையை, முதன் முதலில் உலகுக்கு கூறிய விவசாய விஞ்ஞானி பெஞ்சமின் ஃபிராங்ளினே ஆவார்.

ஆனால், பெஞ்சமின் கூறியதைக் கேட்ட விவசாயிகள், விவசாய மக்கள் வியப்படைந்து வெருண்டார்கள்! செயற்கை உரமிட்டுப் பயிர்களை வளர்ப்பது, கடவுளின் முகத்திலே இயற்கைக்கு விரோதமாக அடிப்பது போல அமையாதா? என்று விவசாயிகள் மனம் பொறுமி, ஃபிராங்ளினைக் கண்டவாறு எல்லாம் கண்டித்துப் பேசினார்கள்.

வயலைச் சூழ்ந்துள்ள பகுதிகளில் ஒருநாள் அவர் வந்து கொண்டிருந்தபோது, அங்கிருந்த நீரோடை ஒன்றைத் தாண்டி வரவேண்டிய நிலை இருந்தது.

நீரோடையைத் தாண்டிட பெஞ்சமின் இறங்கும் போது இரண்டு மூன்று ஓலைக் கூடைகள் வரிசையாக அந்த ஓடையில் மிதந்து வருவதைக் கண்டார். பிறகு, அந்த ஓலைக்கூடையை எடுத்து ஃபிராங்ளின் உற்றுப் பார்த்தபோது, கூடையிலே இருந்த கீற்றுக்களில் ஒன்றிரண்டு வெளியே வந்திருப்பதை அவர் கண்டார்.

கூடையின் கீற்றுக்கள் தண்ணீரில் முளைவிட்டு, சிறிய சிறிய தளிர்களாக முளைத்திருப்பதை உணர்ந்த பெஞ்சமின், “இந்த ஓலைக்கூடைக்கு உயிர் இருக்கிறது.” என்று உறைத்தார். அந்த ஓலைக் கூடையை வீட்டிற்கு எடுத்துச் சென்று அதை முளை, கிளம்ப வைத்தார். அமெரிக்காவில் அன்றுவரை அலரி மரம் உற்பத்தியின் ஆரம்பம் இதுதான் என்பதை அவர் கண்டறிந்தார்.