உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெண்களும் பேரழகு பெறலாம்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெண்களும் பேரழகு பெறலாம் 23 அவசரக்காரர்கள் அவதிப் படுகிறார்கள். இறுதியில் ஏமாந்து போகின்றார்கள் என்பதை நினைவுப் படுத்திப் பயிற்சியைச் செய்ய வேண்டும். (3) பயிற்சி செய்கின்ற நேரம்: பயிற்சியைக் காலையிலும் செய்யலாம். மாலை யிலும் செய்யலாம். அது செய்கின்றவரின் வசதியைப் பொறுத்தது. ஆனால் ஏதாவது ஒரு நேரம் மட்டும் பயிற்சி செய்தால் போதுமானது. அந்தப் பயிற்சியையும் 10 நிமிடத்திலிருந்து 20 நிமிடத்திற் குள்ளாகவே செய்து முடித்தல் நல்லது. பயிற் சியைத் தொடரும் போது பதட் டப் படாமலும், படபடப்பு இல்லாமலும் நிதானமாக, நின்று, நிறுத்தி செய்வது முக்கியம். வியர்வை வந்தால், அதைப் துடைப் பதில் ஒரு முறையை அனுசரிக்க வேண்டியது அவசியம். உடல் பகுதியை அழுத்தித் துடைக்கலாம். ஆனால் முகத்தில் உள்ள வியர்வையை, மெல்லிய துணி கொண்டு மெதுவாக ஒற்றி, ஒற்றி எடுக்க வேண்டும். அப் பொழுது தான் முகத்திலுள்ள மினு மினுப்பு குறையாமல் இருக்கும். அதற்காகவே, அதிகம் வியர்வை வரச் செய்கின்ற வெயில் நேரங்களைக் தவிர்த்து, காலை நேரத்தில் பயிற்சி செய்வதாக இருந்தால், காலை 6 மணியிலிருந்து 7-00 மணிக்குள்ளாகவும், மாலை நேரமாக இருந்தால், சூரியன் மறைந்த பிறகும் செய்தால், பயிற்சி இனிமையாகவும் இருக்கும். பயனுள்ளதாகவும் இருக்கும்.