உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெண்களும் பேரழகு பெறலாம்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 டாக்டர் எஸ். நவராஜ செல்லையா பயிற்சி செய்யும் போது, வேறு எந்தக் காரியத்தையும் நினைக்காமல் , உடலைப் பற்றியும், அங்கங்களுக்கு அது தருகிற அவசியமான அழகைப் பற்றியுமே நினைத்துக் கொண்டு செய்ய வேண்டும். மனம் போல தானே வாழ் வு! உடலுக்கும் அது பொருந்தும். (4) பயிற்சிக்கான உடை: நீங்கள் பயிற்சி செய்கின்ற இடம் தனி அறையாக இருந்தால், குறைந்த ஆடையுடன் செய்வது நல்லது. அரைக்கால் சட்டை அல்லது பைஜாமாவுடன் 'ரவிக் போட்டுக் கொண்டு செய்வது, உடல் உறுப்புக்களை எளிதாகத் தடையின்றி ஏற்றி இறக்கவும் இயக்கவும் வாய்ப்பாகவும் வசதியாகவும் இருக்கும். பயிற்சிக்கான படங்கள், குறைந்த ஆடை எப்படி இருக்க வேண்டும் என்பதற்காக தரப் பட்டுள்து. இப்படித்தான் இருந்து பயிற்சிகள் செய்ய வேண்டும் என்பது கட்டாயமல்ல. குடும்பம் நடத்தக் கூடிய இடம் சிறிய அளவாக இருந்து, மற்றவர்கள் இருக்கும் போது தான் பயிற்சி செய்யக் கூடும் என்ற நிலை இருந்தால், மெல்லியதான சேலை அல்லது வசதிக்கேற்ற ஆடைகளை அணிந்து கொண்டு செய்யலாம். இதில் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய குறிப்பு என்னவென்றால், நீங்கள் உடுத்தியிருக்கின்ற உடை, உங்கள் பயிற்சிக்கு உபத்திரவம் தருவதாக அமையக் கூடாது என்பதே.