உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெண்களும் பேரழகு பெறலாம்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெண்களும் பேரழகு பெறலாம் 27 காலங்களிலும் செய்ய முடியாது. மாத விலக்காக இருக்கும் பெண்களும் , மகப் பேற்றுக்காக கருவுற் றிருக்கும் தாய் மார்களும் , பயிற்சிகள் செய்வதைத் தவிர்த்து விட வேண்டும். மீறிச் செய்வது குளிக்கப் போய் சேற்றைப் பூசிக் கொண்டு வருவதாகவே முடியும். தினமும் பயிற்சி செய்கின்ற பெண்கள், மாத விலக்கு ஏறபட்ட உடனேயே, பயிற்சியை நிறுத்தி விட வேண்டும். பிறகு 5 நாட்கள் வரை அவர்கள் பயிற்சியே செய்யக் கூடாது. இரத்தப் போக்கு நின்று உடல்நிலை வழக்கம் போல, இயல்பாக வந்த வுடன் தான் பயிற்சியை மீண்டும் தொடங்க வேண்டும். மாத விலக் குக் காலங்களில் கூட, வழக்கம் போலவே வீட் டு வேலைகளைச் செய்பவர்களும் , அலுவலகத்திற்குப் போகின்ற பெண்களும் இருக்கத்தான் இருக்கின்றார்கள். பழைய சம் பிரதாய முறைளை, சூழ் நிலை காரணமாகப் பின் பற்ற முடிவதில்லை. வயிற்றுப் பிழைப்புக்காக செய்யும் வேலை போய் விட்டால் என்ன ஆவது ? ஆகவே, அவர்கள் பணி செய்யப் போகின்றார்கள் என்பதை உதாரணமாகக் காட்டி, பயிற்சியையும் செய்தால் என்ன தவறு என்று கேட்கலாம். அது மிகவும் தவறான முறையாகும். பயிற்சி செய்யவே கூடாது. அவ்வாறு அவர்கள் மீறி, ஆர்வ மிகுதியால் பயிற்சி செய்தால் , ஆபத்து அவர்களுக்கு மட்டுமல்ல; குழந்தைக் கும் கூடத் தான். அத்துடன் குழந்தையிருக்கும் கர்ப்பப்பை இடமாற்றம் ஏற்பட்டு, குழந்தை பிறப்பிற்கும் அதிக தொந்தரவு ஏற்பட்டு