உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெண்களும் பேரழகு பெறலாம்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 டாக்டர் எஸ். நவராஜ செல்லையா - o உயிருக்கே ஆபத்தை விளைவிக்கவும் கூடும். எனவே, பழக்கமே இல் லாதவர்கள், இந்த சமயத்தில் பழகிப் பார்க்கிறேன் என்று முயற்சிப்பதும் கூட முறையற்ற செயலாகும். வீண் வம்பை விலைக்கு வாங்குவதாகும். விளையாட்டுக்களிலும், உடற் பயிற்சிகளிலும் மற்றும் இதர உடற் பயிற் சித் துறையிலும் அதிகமாக ஈடுபட்டுப் பழக்கமுள்ள பெண்கள், கருவுற்றிருந்தால், அவர்களுக்குப் பயிற்சி செய்ய ஆர்வமிருந்தால், அவர்களது குடும்ப வைத்தியரை கலந்தாலோசித்து, முடிவு செய்யலாம்! அவ்வாறு அனுமதி கிடைத்தால், கடுமையான பயிற் சிகளைச் செய்யக் கூடாது. வலிமையான பயிற் சிகளையும் சேர்த்துக் கொள்ளக் கூடாது. கடுமையான பயிற்சிகள் கருச்சிதைவு ஏற்படக் காரணமாகிவிடும். இதை உணர்ந்து, மிகுந்த கவனத்தோடும், தகுந்த மேற் பார்வையோடும் பயிற்சி செய்தல் வேண்டும். பயிரை வளர்க் கின்ற தண் ணிர், பயிரையும் பாழ்படுத்திவிடும் தேவையில்லாத போது ஊற்றினால், உடல் வளமுடையதாக இருந்தால் , முன் பின் பயிற்சிகளிலே அனுபவமும் பழக்கமும் இருந்தால், 7 மாத கர்ப்ப காலம் வரை கூடப் பயிற்சி செய்யலாம் என்பது ஒரு சிலர் கருத்து. அதனால், சுகப் பிரசவம் ஏற்படும் என்கிறார்கள். இன்னும் சிலர், பிள்ளை பெற்ற பத்தாம் நாளில் இருந்து கூட பயிற்சி செய்யலாம் என்கிறார்கள். அதையும் குடும்ப வைத்தியரைக் கலந்து