பெண்களும் பேரழகு பெறலாம் 45 உள்ளிழுத்துக் கொள்ளவும் குதிகால் தரையில் இருக்கும் படியே, குதிகால் மீது உட்காரவும். கீழே குனியாமல், நேர் கொண்ட பார்வை இருக்க வேண்டும். சிறிது நேரம் கழித்து, முன்னிருந்த நிலைக்கு எழுந்த பிறகே மூச்சை விடவேண்டும். (20 முறை) 5. பலம் தரும் பத்துப் பயிற்சிகள் மூச்சு இழுக்கும் முக்கியத்துவத்தை நீங்கள் அறிவீர்கள். அதனை முறையாகக் கற்றுக் கொள்ளப் பயிற்சிகளைத் தந்திருக்கிறோம். இவைதான் இனி வரப் போகின்ற எல்லா வகை பயிற்சிகளுக்கும் முன்னோடியாக இருப்பதால், முழுதும் பிழையற புரிந்து கொண்டு ஆர்வத்துடன் செய்ய வேண்டும். ஏனெனில், உடலைப் பதப்படுத்திக் கொண்டால் தான், நம் எண்ணத்திற்கு ஏற்றபடியெல்லாம் தேகம் வளையும் இல்லாவிடில் உறுப்புக்களில் பிடிப் பு ஏற்படவும் வலி உண்டாகவும் நேரும் அதனால் பயிற்சியின் மீதே ஒரு வித இனந் தெரியாத வெறுப்பு வரவும் வழி ஏற்படும். ஆகவே, பொறுப் புணர்ந்து செய்க. மூச்சு இழுத்து விடும் பயிற் சிக்கு, மேற் கூறிய பயிற் சிகளை முன்னே குறிப் பிட்டுள்ள எண்ணிக்கையில் செய்யவும் தினந்தோறும் பயிற்சியின் அளவை மிகுதிப் படுத்திக் கொண்டே வர வேண்டும்.
பக்கம்:பெண்களும் பேரழகு பெறலாம்.pdf/47
Appearance