008 'அந்தியுள் மந்திரம் அஞ்செழுத்தும்மே என்றும் கூறுவது வியப்பை அளித்தது. இந்த முரண்பாட்டைத் தெளிவதற்காக (இ)ரிக்கில் சிவனுடைய இடம் யாது? என்ற ஆய்வு செய்யப் பெற்றது. சிவன் என்ற பெயரே அங்கு மிகப் பிற்பட்டு வந்த பெயராகும் என்பதை யும், தொடக்கத்தில் ருத்ரன் இரிக்கில் என்ன இடத்தைப் பெற்றான் என்பதையும் தெரியமுடிந்தது. இதிலிருந்து ருத்ரன், ருத்ர சிவனாகி, சதருத்ரீயத்தால் புகழப் படும் வளர்ச்சி ஆயப் பெற்றது. பின்னர் ஸ்வேதாஸ்வதர உபநிடதத்தில் எப்படிச் சிவன் முழுமுதற் பொருளாகப் பேசப் பெறும் நிலையை அடைந்தான் என்பதும் ஆயப்பெற்றது. இதனையடுத்துச் சங்க காலம் தொடங்கி இத்தமிழகத்தில் எவ்வாறு சிவபெருமான் பேசப்பெறுகிறான் என்பதும் ஆயப் பெற்றுள்ளது. இவை இரண்டையும் சீர்தூக்கிப் பார்த்தபொழுது முரண்பாடுடைய இந்த இரு கொள்கைகளுக்குள்ளும் ஓர் ஒருமைப்பாட்டை ஏற்படுத்த முயன்றார் திருஞானசம்பந்தர் என்பதை அறிய வாய்ப்பு ஏற்பட்டது. தமிழ்மொழி, பண்பாடு நாகரிகம் என்பவற்றைக் காப்பாற்றவே இப் புதுவழியை அவர் மேற்கொண்டார் என்பதை உணர முடிந்தது. இந்த மாபெரும் புரட்சியைச் செய்து தமிழ் மொழியை நிலை நிறுத்தியவர் திருஞானசம்பந்தரே என்ற பேருண்மையை நாம் மறந்தாலும் தம் கூர்த்த மதியால் கண்டுகொண்டார் சேக்கிழார். அப் பெருந்தகைக்கு நன்றி பாராட்டும் வகையில் தம் பெரிய புராணத்தில் மூன்றில் ஒரு பங்கு இடத்தை இவர் ஒருவருக்காகவே ஒதுக்கித் தமிழரின் நன்றிப் பெருக்கை வெளியிட்டார் என்பதை அறிய முடிந்தது. - பெரிய புராணம் சைவசமய அடியார்களின் வரலாறுகளைப் பேசும் நூல் என்றுதான் இதுவரைக் கருதப் பெற்று வந்தது. 7ஆம் நூற்றாண்டில் எழுந்த புரட்சியின் முடிவாக அதனை வலியுறுத்தும் காப்பியமாய், தமிழர்களைத் தட்டி எழுப்பும் அறநூலாய்த் தோன்றிற்று என்பதையும், இந்நூல் தமிழர் அனை வரும் போற்றவேண்டிய நூல் என்பதையும் தமிழர்கள் ஏனோ நினைய மறந்து விட்டனர்.
பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-1.pdf/10
Appearance