உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-1.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

01 () அன்பு, சகோதரத்துவம், உயிர்கள் மாட்டு இரக்கம் என்ப வற்றைப் பேசிய எல்லாச் சமயங்களும் இப் பழிவாங்கும் பணியில் குறையே வைக்கவில்லை. சைவ சமயமும் இதற்கு விலக்கன்று. உலகந் தழுவிய குறிக்கோள் கொண்டிருந்த சேக்கிழாரும் இதில் விலக்கில்லை. எனவே சமயம் வேறு, சமயிகள் வேறு என்ற தத்துவமே என்றும் உண்மையாகும். இது பற்றியும் நூலுள் விரிவாகப் பேசப்பெற்றுள்ளது. நூல் முழுவதிலும் கூறியது கூறல் ஒரளவுக்கு மிகுதியாகவே காணப் பெறும். பல்வேறு உதிரி வரலாறுகளைப் பல்வேறு அடிப் படையில், கோணங்களில் காணும்பொழுது திருப்பித் திருப்பி ஒரே வரலாற்றைக் கூறவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு விடுகிறது. எறிபத்தர், புகழ்ச்சோழர், கண்ணப்பர் என்பவர்கள் வரலாறுகள், பகுதி பகுதியாக வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு அடிப்படைக்கு உதாரணங்களாகக் காட்டப் பெற்றுள்ளன. எனவே கூறியது கூறலை எவ்வளவு முயன்றும் தடுக்க முடிய வில்லை. கற்பார் இதனைப் பொறுக்க வேண்டுகிறேன். ஒரு லட்சம் ரூபாய் அறக்கொடை அளித்துப் பன்னிரு திருமுறைக் கட்டில் என்ற நிலையான ஒரு பகுதியைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் நிறுவிய திருமதி உருக்குமணியம்மாள், கிருஷ்ணசாமிப் பிள்ளை ஆகிய இருவருக்கும், தமிழகம் என்றும் கடப்பாடுடையது. நீண்ட காலமாக என்பால் அன்பு கொண்டு என் இலக்கியத் திறனாய்வுப் பணிக்கு ஊக்கம் அளித்துவந்த முது முனைவர் வ:அய். சுப்பிரமணியனார் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் துணை வேந்தராய் இருந்து பிறர் நினைக்க முடியாத அளவிற்கு, அப் பல்கலைக் கழகத்தை வளர்த்தார். மூலையில் ஒதுங்கி நின்ற என்னை அவரே இப்பணியை மேற் கொள்ளுமாறு பிடிவாதமாக அழைத்து இதனைச் செய்யுமாறு அறக்கொடையாளர்க்கும். துணைவேந்தருக்கும் என் நன்றி உரியதாகும். இத் தூண்டுதல் இல்லையானால் இந்த வயதில் இப் Líšil முயற்சியில் இறங்கியிருக்க மாட்டேன்.