இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
()|| என் தந்தையார் பெருஞ்சொல் விளக்கனார். அ.மு. சரவண முதலியார் அவர்கள் உண்ணும் சோறும், பருகும் நீரும் பெரிய புராணம் என்றே வாழ்ந்தவர்கள். ஆங்கிலக் கல்வி இல்லாமலும் சிறந்த திறனாய்வாளராக ஒருவர் விளங்க முடியும் என்பதற்கோர் எடுத்துக் காட்டாய் விளங்கியவர் அவர் என்றாலும் அவர் அப்பெரியவர் இன்று உயிருடன் இருந்தால், இந்த ஆய்வை ஏற்றுக் கொள்வாரா? என்றால் ஆம் என்று உறுதியாகக் கூறல் முடியாது. இருப்பினும், அப்பெரியவர்க்கு, இந்நூலைக் காணிக்கை ஆக்குகிறேன். இந்நூலை வெளியிட்ட கங்கை புத்தக நிலையத்தாருக்கு என் நன்றி உரியதாகும். சென்னை-83. அ.ச.ஞானசம்பந்தன் ஏப்ரல், 1999