உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-1.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

0.14 சங்கப்பாடல்கள் கூறாதது ஏன்?-83; பூரீருத்ரம் நன்கு அறியப் பட்டிருப்பினும் அதில் வரும் கருத்து எதனையும் தமிழர் போற்றவில்லை-84; வேத காலத்தில் வேத வழக்கை எதிர்த்த வைதிகர்கள் உண்டு. அவருள் கெளண்டின்ய மரபினர் இடம் பெறுகிறார்கள்-85; சங்கப் பாடல்-விண்ணந்தாயன் இதில் இடம் பெற்றான்-86; வேதவழக்கை மறை முகமாகச் சாடின ஞானசம்பந்தரும் இந்தக் கெளண்டின்ய கோத்திரத்தைச் சேர்ந்தவரே-86; சிலப்பதிகார காலத்தில் சிவன் நிலை, உமையின் வளர்ச்சி-87; உமையொருபாகன் கருத்து வளர்ச்சி-89; திருமுருகாற்றுப்படை ஒருங் கிணைப்பு முயற்சி-94; பரிபாடல் இரண்டு சமயங் களின் போராட்டத்தை அறிவிக்கின்றது-95; சமணம் இந் நாட்டில் கால் கொள்ளக் காரணம்-95; பெளத்தம் நிலையாமைக்குக் காரணம்-9 8;. அடிக்குறிப்புக்கள்-100, 101. தேவார காலத்துக்கு முந்தைய சிவன் களப்பிரர் பற்றிய குறிப்புக்கள்-102; பேராசிரியர் அருணாசலனாரின் நூல் பற்றிய ஆய்வு-102 களப்பிரர்பற்றிச் சேக்கிழார் தரும் குறிப்புக்கள்-106 களப்பிரர் காலத்தில் சைவ சமய நிலை-109, கலித் தொகையும், அம்மையாரும் இறைவன் ஆடல் பற்றிக் கூறியவை-112: இளங்கோ கூறும் மதுராபதித் தெய்வம் யார்?-115; காரைக்காலம்மை சைவ சமயத் துக்குத் தந்த புதிய கருத்துக்கள்-116; சம்பந்தருக்கு முன்னோடி அம்மையாரே ஆவார்-118; அம்மையார் களப்பிரர் பற்றி ஒன்றும் கூறாதது ஏன்?-120. அடிக்குறிப்புக்கள்-123, 124. மூவர் காலப் பின்னணி மூவருள் நாவரசர் தோன்றுமுன் தமிழகமும், பல்லவ நாடும் இருந்த நிலை-125; காஞ்சியைச் சுற்றித் திகம்பர சைனர் இருக்கை-126; சமணர் சமயத்தைப் பரப்புவதில் தீவிரமாக ஈடுபட்டனர்-127; ஆட்சி செய் பவர்களை மதமாற்றம் செய்வதன் மூலம் வேகமாகச் சமய மாற்றம் செய்தனர்-127; சோணாட்டில் பல சிவன் கோவில்கள் இருப்பவும், பாண்டிய, பல்லவ நாடு களில் ஏன் குறைந்துள்ளன?-129; பல்லவர் காலத்தில்