16. 0.19 சங்கப் பாடல்களில் பல அடை அடுக்கி வருதல் ஏன்?-364; குறும்பாடல்கள் நாளா வட்டத்தில் நெடும் பாடல்களாக வளர்ந்தன-3 65; சிலப்பதிகாரம் திடீரென்று தோன்றிய காப்பியமன்று; அது நன்கு வளர்ச்சியடைந்த இலக்கியக் காப்பியம்-367; தொல்காப்பியங் கூறும் அம்மை, அழகு முதலியன இன்னும் புரிந்து கொள்ளப்படவில்லை-368; நெடும் பாடல்கள் வளர்ச்சியே காப்பியந் தோன்ற வழி வகுத்தது-369; காப்பியங்கள்பற்றித் திறனாய்வாளர் கூறுவன-373; உடல் வீரம் காட்டுபவர்கள் காப்பிய நாயகர்களாக இருந்த நிலை மாற்றம்-380; பண்பாடு கள், குறிக்கோள்கள் காப்பியப் பொருளாக அமைய லாம்-381; சமுதாய வளர்ச்சியில் காப்பியம் தோன்றுங் காலம்-384; மதுரைக் காஞ்சியின் தனித்தன்மை-387; சிலம்பு, மேகலை இவை இரண்டிடையே உள்ள ஒற்றுமை வேற்றுமைகள்-392; சிலம்பு வகுத்த புதுவழியில் பின்வந்தவர் யாரும் செல்லவில்லை-395; தமிழ்க் காப்பியங்கள் வட நாட்டுக் கதைகளை எடுத் தமை ஏன்?-396; இவ்விரு காப்பியத் தலைவிகளும் கணிகையரே-39 8. - அடிக்குறிப்புக்கள்-402-404. சேக்கிழார் வகுத்த காப்பிய நெறி இவருக்கு முன்னர்த் தோன்றிய எந்தக் காப்பியத் தையும் இவர் பின் பற்றவில்லை-405; பெரியபுராணப் புற அமைப்பு அன்றிருந்த காப்பியங்களை ஒரளவு தழுவி அமைந்தது. பெரியபுராணக் காப்பிய நாயகர் யார்?-சுந்தரர் என்று கொள்வதில் உன்ள இடையூறு கள்-406: சேக்கிழார் சருக்கப் பிரிவினையிற் கூடச் சுந்தரரைப் பின்பற்றுகிறார்-407; திருத்தொண்டத் தொகை வழங்கியமைக்காக அவரிடம் நன்றி பாராட்டு கிறார்-40 8; காப்பிய நாயகராகச் சுந்தரரைக் கொள்ள வில்லை-409; சுந்தரருக்குத் தொடர்பில்லாத சோணாட்டைப் பாட எடுத்துக் கொண்டது ஏன்?-411; மனுநீதிக் கதை ஏன் இடம் பெற்றது?-41.3; உபமன்யு முனிவரின் கதை ஏன் இடம் பெற்றது?-414; மெய்ம்மைகட்கு முதலிடம் தந்து பாடியவர் இவர் ஒருவரே-416; திருமுறை கண்ட புராண ஆசிரியர் யார்?-4 18: சேக்கிழார் காப்பியத்தின் உயிர்நாடி
பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-1.pdf/21
Appearance