உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-1.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரியபுராணம் - ஒர் ஆய்வு 1. முன்னுரை பக்திப் பாடல்களை மிகுதியும் பெற்றது தமிழ தமிழ் மொழி பெற்றுள்ள சிறப்புக்கள் பலவகைப்படும். உலக மொழிகள் எதனுள்ளும் இன்றுவரை காண முடியாத பொருளதிகாரம் பற்றிப் பேசும் பகுதியைத் தன்னுள் அடக்கியுள்ள தொல்காப்பியம் இன்று நமக்குக் கிடைக்கும் நூல்களுள் மிகப் பழமையான இலக்கண நூலாகும். தனித்தன்மை பெற்றுத் தொல்காப்பியம் விளங்குவதுபோலவே, சமய இலக்கியம் என்ற பகுதியும் தனித்தன்மை பெற்று விளங்குகிறது. பக்திப் பாடல் கள் என்ற தொகுப்பைப் பெற்றுள்ள சிறப்பு உலக மொழிகள் அனைத்துள்ளும் தமிழுக்கு வாய்த்ததுபோல் வேறு எந்த மொழிக்கும் வாய்க்கவில்லை. அளவு கொண்டு கணக்கிட்டால் கூடத் தமிழ்மொழியில் முகிழ்த்துள்ள பக்திப் பாடல்களின் அளவு வேறு எந்த மொழியிலும் இல்லை. தமிழுக்கு அடுத்த இடத்தைப் பெறுவது வடமொழியன்று, ஹீப்ரு மொழியே என்று வல்லுநர் கள் கூறுகின்றனர். பக்தி இயக்கக் காலம் சங்ககாலந்தொட்டு இடையீடு இன்றி, வளர்ந்த தமிழர் வாழ்வும், இலக்கிய வளர்ச்சியும் களப்பிரர் இடையீட்டால் தடைப்பட்டன; மறுபடி அந்த வளர்ச்சியும் அதன் போக்கும் முற்றிலும் மாறிவிடும் நிலை ஏற்பட்டது. புதிய முறையில் தமிழ் இலக்கியம் வளரத் தொடங்கிற்று; அவர்கள் வாழ்வு முறையிலும்