2 பெரியபுராணம் - ஓர் ஆய்வு புதிய மாறுதல்கள் தோன்றின. இவ்வாறு தோன்றிய புதிய வாழ்க்கைமுறை, குறிக்கோள்கள், இலக்கியம் என்பவை அனைத் தையும் பக்தி இயக்கக் காலம் என்ற பொதுத் தலைப்பினுள் அடக்கிப் பேசலாம். கி.பி. 7ஆம் நூற்றாண்டு முதல் 12ஆம் நூற்றாண்டுவரை உள்ள இடைப்பட்ட 5 நூற்றாண்டுகளையுமே பக்தி இயக்கக் காலம் எனக் கூறலாம். இந்தக் காலத்தின் தொடக்கத்தில் திருஞானசம்பந்தப் பெருமான் முதன்முதலாகத் தேவாரம் பாடத் தொடங்கினார். இக்காலத்தின் இறுதிக் கட்டத்தில் அதாவது 12ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் சேக்கிழார் பெருமான் திருத்தொண்டர் புராணத்தை இயற்றி னார். ஏறத்தாழ இதே காலகட்டத்தில் ஆழ்வார்களும் தோன்றி வைணவ சமயத்தை வளர்த்தனர். சைவ சமய இலக்கியங்களின் முடிமணியாக விளக்குகின்ற பெரியபுராணம் என்று கூறப்பெறும் திருத்தொண்டர் புராணம் தோன்றிய காலச் சூழ்நிலை, சைவ சமய வளர்ச்சியில் இப் பெருநூலின் இடம், இலக்கிய வரிசையில் இதனிடம், காப்பியம் என்று இதனைக் கூறமுடியுமா என்பது முதலான கருத்துக்களை ஆய்வதே இவ்வாராய்ச்சியாகும். இந்த ஆய்வு இரண்டு பிரிவுகளில் செய்யப்பெறும். வேதம், வைதிகம், சைவம் இவற்றிடைத் தொடர்பு, தமிழகச் சைவத்தில் வேதத் தொடர்பு, சைவ சமயத்தின் தொன்மை, வளர்ச்சிமுறை, வழிபாட்டு முறை என்பவைபற்றிய ஆய்வு முற்பகுதியாகும். இலக்கிய வரிசையில் இதன் இடம், இதன் கவிதைச் சிறப்பு கவிதைகள் தோற்றம், வகைகள், வளர்ச்சி, தனிக் கவிதைகள், நெடும் பாடல்கள், விருத்தப் பாடல்கள், கதை பொதி பாடல்கள், காப்பியத் தோற்றம், வளர்ச்சி பற்றிய ஆய்வு, இந்நூல் காப்பியம் என்ற பெயர் பெறுமா? என்பவை இரண்டாம் பகுதியாகும். தமிழர்களின் பழங்கால வாழ்வை அறிவிப்பன தொல்காப் பியம், பத்துப்பாட்டு, எட்டுத்தொகை என்பவையாகும். இந்நூல் களுள் சைவசமயக் கடவுளர், வழிபாடு என்பவை எந்த அளவு இருந்தன என்பதை முதலிற் காண்டல் வேண்டும். பழைய தமிழ் இலக்கணமாகிய தொல்காப்பியத்தில் சிவபெருமான் இடம் பெற்றதாகத் தெரியவில்லை. மாயோன், சேயோன், வேந்தன், வருணன், பழையோள் எனப்பட்ட துர்க்கை என்ற ஐவர் பற்றிய பேச்சு மட்டுமே உளது. இந் நூற்பாக் கூறும் தெய்வங்களுள் வருணன், இந்திரன் என்ற இருவரும் ஆராயப்பட வேண்டி யவர். இவர்கள் ஒழிந்த ஏனைய மூவரும், பத்துப்பாட்டு
பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-1.pdf/29
Appearance