உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-1.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை w 3 எட்டுத்தொகை நூல்களுள் அதிகம் பேசப்படுகின்றனர். இனி, தொல்காப்பியர் குறிப்பிடாத சிவபெருமானும் இலக்கியங்களில் இடம் பெறுகிறான். இந்திரன் தேவலோகத்தின் மன்னன் என்றும். இவ்வுலகில் வள்ளன்மை பூண்டு ஒழுகினோர் தேவருலகம் புகுவர் என்றும் இத் தமிழர் கருதினர் என்பதை அறியப் புறப் பாடல் ஒன்று உதவுகிறது. 'திண்தேர் இரவலர்க்(கு) ஈத்த தண்டார் அண்டிரன் வரூஉம் என்ன ஒண்தொடி வச்சிரத் தடக்கை நெடியோன் கோயிலுள் போர்ப்புறு முரசம் கறங்க ஆர்ப்பெழுந் தன்றால் விசும்பினானே' இவ்வாறு ஒரோவழி இந்திரன் பேசப்பெறுவது தவிர அவன் பற்றிய குறிப்பு வேறு ஏதுமில்லை. தொல்காப்பியர் கூறும் இந்திரன், வருணன் இலக்கியத்தில் இடம் பெறாதது ஏன்? - சங்ககாலத்தை அடுத்துத் தோன்றியவை எனப்படும் சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும், இந்திரவிழா எடுத்த செய்தி விரிவாகப் பேசப்பெறுகிறது. அப்படியானால் தொல் காப்பியத்தில் தெய்வமாக இடம்பெற்ற இந்திரன் சங்கப் பாடல் காலத்தில் மறைந்து, பின்னர்த் தோன்றக் காரணம் யாது? காவிரிப்பூம்பட்டினமும், அதன் பல் வேறு விழாக்களும் ஓயாமல் பேசப்பெறும் சங்கப் பாடல்களில் இந்திரன் பற்றியோ அவனை ஒட்டிய விழாக்கள் பற்றியோ ஒன்றும் பேசப் படாத நிலை ஏன்? வருணனை எடுத்துக் கொண்டால் இந்திரனுக்குரிய சிறிய இடங் கூட அவனுக்கு இருந்ததாகத் தெரியவில்லை. 'மாயோன் மேய' என்ற அகத்திணை இயல் 5 ஆம் சூத்திரத் திற்கு உரையிட்ட நச்சினார்க்கினியர் இவற்றிற்கு சங்கப் பாடல் களிலிருந்து மேற்கோள் காட்டி வருகையில் மாயோனை, 'பாடிமிழ் பரப்பகத்து அரவனை அசைஇய ஆடுகொள் நேமியான் “........... என்ற பாடலாலும், சேயோனை, 'படியோர்த் தேய்த்த பல்புகழ்த் தடக்கை நெடுவேள் பேணத் தனிகுவள் இவள்ளன'