உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-1.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 பெரியபுராணம் - ஒர் ஆய்வு என்ற பாடலாலும் நிறைவு செய்கிறார். ஆனால் அடுத்துள்ள இந்திரன், வருணன், இருவருக்கும் சங்கப் பாடல்களில் எக்குறிப் பும் இன்மையின், பாடல்களிலிருந்து மேற்கோள் காட்ட முடிய வில்லை. எனவே, "வையைப் புதுப்புனல்ஆடத் தவிர்ந்தமை தெய்வத்தில் தேற்றித் தெளிக்கு " என்ற வரிகளைக் காட்டி 'இந்திரனைத் தெய்வம் என்றதனாலும் இந்திரவிழவூரெடுத்த காதையானும் தெளிக' என்று கூறிச் செல்கிறார். அடுத்து 'இனி நெய்தல் நிலத்தில் நுளையர்க்கு வலை வளந்தப்பின் சுறவுக்கோடு நட்புப் பரவுக் கடன் கொடுத்தலின், ஆண்டு வருணன் வெளிப்படுமென்றார். அவை, ‘சினைச் கறவின் கோடு நட்டு

  • - - - • ... * * மனைச் சேர்த்திய வல்லணங்கினான்'

எனவும் 'கொடுஞ்சுழிப் புகார்த் தெய்வம் நோக்கி " 'அணங்குடைப் பணித்துறை கைதொழு தேத்தி யாயும் ஆயமொடு அயரும் " - எனவும் வரும்' என்று காட்டிச் செல்கிறார். இந்திரனுக்கும் வருணனுக்கும் நச்சினார்க்கினியர் காட்டிய மேற்கோள்கள் சற்றும் பொருந்தா. 'தெய்வம்' என்று பாடலில் வருவதை 'இந்திரனைத் தெய்வமென்றதனால் என்று உரையாசிரியர் கூறுவது மிக வலிந்து பொருள் கொள்வதேயாகும். சங்க இலக் கியங்களில், அமரர் செல்வன்'", புரந்தரன், ஐயிருநூற்று மெய்ந் நயனத்தவன்', திருக்கிளர்செல்வன் ', இந்திரன் பூசை, இவள் அகலிகை", ஏறதிர்க்கு இந்திரன் இருமுருமென' , அந்தர வானியாற்று ஆயிரங் கண்ணினான் இந்திரன் ஆடுங் களத்து '" என்பவையே இந்திரன் பற்றிய குறிப்புக்களாகும். ஆய் அண்டிரனை இந்திரன் கோயில் வரவேற்கச் சித்தமாயுள்ளது' என்ற குறிப்புத் தவிர ஏனைய அனைத்தும் பரிபாடலில் காணப் பெறும்குறிப்புக்களேயாகும். பரிபாடலில் காணப்பெறும் குறிப்புகளை எடுத்துக்கொள்வதில் மிகவும் கவனமாக இருத்தல் வேண்டும். வேத காலத்தில் மிக முக்கியமான தெய்வமாகக் கருதப்பட்டவர்களுள் இந்திரன் ஒருவனாவான். ஆனால் பரி பாடல் குறிப்பிடும் இந்திரன் அகலிகையை வலிதிற் கொண்டு