உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-1.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 - பெரியபுராணம்- ஓர் ஆய்வு களை மட்டும் ஏன் குறிப்பிட வேண்டும் என்ற வினாத் தோன்றியே தீரும். இந்தப் பிரச்சனைக்கு விடை காண்பது எளிதன்று. தொல் காப்பியர் காலத்துக்கு, எல்லாச் சங்கப் பாடல்களும் பிற்பட்டவை என்று உறுதியாகக் கூறுவதற்கும் இல்லை. இச் சங்க நூல்கள் எனப்படுபவை அனைத்தும் தொகுப்புகள் ஆகலின் இவற்றுள் காணப்பெறும் தனித்தனிப் பாடல்கள் பல்வேறு காலங்களில் பல்வேறு இடங்களில் தோன்றியிருக்கவேண்டும். நால்வகை நிலத் துக்குக் கூறப்பெற்றவர் அவ்வந்நிலத் தெய்வங்களாவர். ஆனால் சிவபிரான் முழுமுதற் கடவுள் என்று கருதப்பட்டதால் அவர் பற்றித் தொல்காப்பியர் கூறாதிருக்கலாம் என்றுங் கொள்ள {3}}ff is), சங்கப் பாடல்களில் வேதம், வேள்வி பற்றிய குறிப்புக்கள் புறநானூற்றில் சில பாடல்கள் வேதம் பற்றியும், யாகங்கள் பற்றியும் பேசுகின்றன. 'நா அல் வேத நெறி திரியினும் ' ........ 'நான்மறை முனிவர் ஏந்துகை' ...... 'புரையில் நற்பனுவல் நால்வேதத்த " ........ 'அந்தணாளர் நான்மறை ' ......... என்ற இவற்றில் முதலாவது பெருஞ்சோற்று உதியஞ் சேரலா தனை முரஞ்சியூர் முடி நாகராயர் என்பவர் பாடியது. அடுத்த இரண்டும் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியை முறையே காரிகிழாரும், நெட்டிமையாரும் பாடியனவாகும். நான்காவது சிறு வெண்டேரையார் என்பவர் பாடியதாகும். இவற்றையன்றி, 'அருமறைநாவின் அந்தணர்' எனச் சிறுபாணாற்றுப்படை யும், 'நான்மறையோர்' ' எனப் பட்டினப்பாலையும் கூறிச் செல் கின்றன. இவை குறிக்கும் நால் வேதங்கள் இன்றும் வழக்கில் உள்ள நால் வேதங்களேயாகும் என்று கருதுவதா என்றும் தெரிய வில்லை. இவ்வாறு ஐயுறுதலுக்குக் காரணம் உள்ளது. 'அருமறை பலபகர்ந்து' 'என்ற பகுதிக்கு உரையிட்ட நச் சினார்கினியர் ரிக், யஜூர் முதலியவற்றைக் கூறாமல், இதன் கண் மறையாவன தைத்ரீயமும், பெளடியமும், தலவகாரமும், சாம வேதமுமாம் என எழுதியுள்ளார். தொல்காப்பியச் சிறப்புப் பாயிரத்து உரையிலும், அறங்கரை, நாவின் நான்மறை முற்றிய' என்ற இடத்தும் தைத்ரீயம் முதலிய அந் நான்கையே கூறியுள்