உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-1.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை Ꮨ அதனால் அவதியுற்றுப் பூன்ை வடிவுடன் வெளிப்பட்டவன். தவிர கோதமன் சாபத்தால் உடலில் ஆயிரம் கண்கள் பெற்றவனுமாவான். வேதத்திற் கூறப்பெற்ற இந்திரனாக இவன் இருத்தல் இயலாது. புராண, இதிகாசகால இந்திரனே பரி பாடலிற் பேசப்படுகிறான். வேதத்தில் காணப்பெறும் இந்திரன், புராண இதிகாச காலங் களில் தாழ்ந்துவிட்டது போல, வேதத்தில் காணப்பெறும் வருணன் பின்னர் சிறு தெய்வங்களுள் ஒருவனாகிவிட்டான். எனவேதான் சங்கப் பாடல்களில் வருணன் பற்றிய ஒரு குறிப்பும் இல்லை. தொல்காப்பியர் அகத்திணை 5ஆம் சூத்திரத்திற் குறித்த இந்திரன், வருணன் என்பார் வேதகாலத்தில் குறிக்கப் படும் தெய்வங்கள் ஆவார். தொல்காப்பியரின் இந் நூற்பா வில் உள்ள புதுமையும் ஆயத்தக்கது. அவர் கூறிய மாயோன், சேயோன் என்ற இருவரும் வேதத்தில் காணப்படாத தெய்வங் கள்; ஆனால் தமிழகத்தில் வேரூன்றி இருந்த சமயக் கருத்துக் களின் மையமாக உள்ளவர் இவ்விருவரும். எனவே தமிழ் இலக்கியங்களில் இவர்கள் பற்றிப் பரவலாகப் பேசப்படுகின்றது. வேதத்தில் இடம்பெறாத மாயோனுக்கும், சேயோனுக்கும் தொல்காப்பியத்தில் இடம் மாயோனும் சேயோனும்வேதத்தில் இடம் பெறவில்லை; ஆனால் தமிழகத்திலும், தமிழ் இலக்கியத்திலும் பரவலாகக் காணப்படுகின்றனர். இதன் எதிராக இந்திரனும் வருணனும் வேதத்தில் மிகுதியாகக் காணப்படுகின்றனர்; ஆனால் தமிழ் இலக்கியத்தில் அதிகமாக இடம் பெறவில்லை. இவ்வாறு இருத்தலின், தொல்காப்பியர், தம் காலத்தில் வேத வழக்கொடு பட்ட தெய்வங்கட்கும் இங்கு இடமுண்டு என்ற கருத்தைக்காட்ட வேண்டி இந்திரனுக்கும் வருணனுக்கும் இடம் கொடுத்திருக்க லாமோ என்று நினைக்கத் தோன்றுகிறது. அந்த நிலையில் அதாவது இந்திரனும் வருணனும் வேதத்தில் போற்றப்படும் நிலையில் சிவபெருமானுக்கு அங்கு இடமே இல்லை. எனவே தான் சிவபெருமான் பற்றிய குறிப்பு ஒன்றையும், தொல்காப்பியர் கூறவில்லையோ? என்றும் ஐயுற வேண்டியுளது. இவ்வாறு நினைப்பதிலும் ஒர் இடையூறு தோன்றுகிறது. வேத வழக்கில் சிவபிரான் இல்லை என்பதனால் தொல்காப்பியர் அவரைக் குறியாது விட்டுவிட்டார் என்றால், மாயோனும், சேயோனும் வேதத்தில் இல்லையே? அவ்வாறு இருக்க அவர்