உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-1.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 பெரியபுராணம் - ஓர் ஆய்வு பூஞ்சாற்றுார்ப் பார்ப்பான் கவுணியன் விண்ணந்தாயனின் முன்னோர் என்பதும் இப் பாடல் மூலம் அறியக்கிடைக்கின்றன. 'நன்றாய்ந்த நீனிமிர்சடை முதுமுதல்வன் வாய்போகாது ஒன்று புரிந்த ஈரிரண்டின் ஆறுணர்ந்த ஒருமுது நூல் இகல் கண்டோர் மிகல் சாய்மார் மெய்யன்ன பொய்யுணர்ந்து பொய்ஓராது மெய்கொளிஇ மூவேழ் துறையும் முட்டின்று போகிய உரைசால் சிறப்பின் உரவோர் மருக 27 ஆறு அங்கம் என்பவை வியாகரணம், சோதிடம், நிருத்தம், சந்தம், சிக்கை, கற்பம் என்பனவாகும். இவற்றை மணிமேகலை 27ஆம் காதையின் 100 முதல் 104 வரையுள்ள அடிகளாலும் அறியலாம். இருபத்தொரு கேள்விகளாவன: ஸோமயஞ்ளும்-7; ஹவிர்யஞ்ளும்-7; பாகயஞ்ளும்-7 என்பனவாகும். வேதம் பற்றி அறிந்திருந்த சங்கத் தமிழர் அதன் விரிவுகளை யும் அறிந்திருந்தனர் என்பதை இப் பாடலால் அறிவதுடன் பதிற்றுப்பத்து 21ஆம் பாடலாலும் அறிய முடிகின்றது. 'சொல், பெயர், நாட்டம், கேள்வி, நெஞ்சமென்று ஐந்துடன் போற்றி அவை துணையாக எவ்வம் சூழாது விளங்கிய கொள்கைக் காலை யன்ன சீர்சால் வாய்மொழி உருகெழு மரபில் கடவுட் பேணியர் கொண்ட தீயின் சுடர் எழுந் தோறும் " இப்பாடலின் முதல் அடியில் வரும் சொல் என்பதற்கு வேதச் சொற்கட்கு இலக்கணங் கூறும் பிராதிசாக்கியம் முதலியன என்றும், பெயர் என்பதனை அவற்றிற்குப் பொருள் கூறும் நிருத்தம் என்றும், நாட்டம் என்பதற்குச் சோதிடம் என்றும், கேள்வி என்பதற்கு வேதம் என்றும் குறிப்புரை கூறுவார் டாக்டர் உ.வே.சா. அவர்கள். எனவே காலத்தால் மிக முற்பட்ட புறநானுாறு வேதம் பற்றி உரைக்கும் ஆறு அங்கங்கள், எவை எவை என்ற பொருளைத் தமிழில் விரித்துக் கூறும் இப் பதிற்றுப் பத்தும், தமிழர்கள் வேத விற்பன்னர்களாக இருந்தமையை அறிவிக்கும். அந்தணர் வேள்வி