உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-1.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை - 9 செய்தலையும், முத்தீ வளர்த்தலையும் முறையே புலனழுக்கற்ற அந்தணாளனாகிய கபிலனும், முரஞ்சியூர் முடிநாகராயனும் 'அழல் புறந்தரூஉம் அந்தணர் ’ என்றும் 'அந்தி அந்தனர் அருங்கடன் இறுக்கும் முத்தி விளக்கு......... 3 0 என்றும் கூறிப்போயினர். இதுவரைக் கூறியவற்றால் சங்ககாலத் தமிழர் வேதத்தை நன்கு அறிந்திருந்தனர் என்பதையும், வேள்விகள் பல செய்தனர். என்பதையும் அறிய முடிகின்றது. இனி இக் கருத்தை நெடும் பாடல் ஆகிய மதுரைக் காஞ்சி, 'சிறந்த வேதம் விளங்கப் பாடி உயர்நிலை உலகம் இவனின்று எய்தும் குன்று குயின்றன்ன அந்தணர் பள்ளியும் ' என்றும் “தாதுண் தும்பி போது முரன்றாங்கு ஒதல் அந்தணர் வேதம் பாட....... 3 2 என்றும் கூறுவதும் கடியலூர் உருத்திரங்கண்ணனார் பாடிய பெரும்பாணாற்றுப்படையில், 'வளைவாய்க் கிள்ளை மறைவிளி பயிற்றும் மறைகாப்பாளர் உறைபதி............ 33 என்று வருவதும் அறிய வேண்டியனவாகும். இவற்றையல்லாமல் பரிபாடலில் இக்கருத்து நிரம்பப் பேசப் படினும் அவற்றை இங்கே காட்டாமைக்குக் காரணம் உண்டு. வேதம் பற்றியும், அந்தணர் பற்றியும், வேள்வி பற்றியும் இத் துணை அளவு பேசப்படினும், புறம் 166ஆம் பாடல் நீங்கலாக இவ் வேள்விகளைப் பற்றி விரிவான விளக்கம் ஒன்றும் பிறவிடத்துத் தரப்பெறவில்லை. வேள்விகள் செய்யப்பெற்றன; அந்தணர்கள் செய்தனர்; அரசர் செய்வித்தனர் என்ற குறிப்புக்கள் தவிர இவ்வேள்வி