1 0 பெரியபுராணம் - ஓர் ஆய்வு யாருக்குச் செய்யப்படுகிறது? அதனை ஏற்றுக்கொள்பவன் யாவன்? இந்த வேள்வியின் பயன் யாது? என்பவைபற்றி எவ்விதக் குறிப்பும் இல்லை. எந்த ஒரு தெய்வம் பற்றியும் புறம் 16 6 தவிர விரிவான குறிப்பு ஒன்றும் இல்லை. இதன் எதிராகப் பரிபாடலில் வரும் வேத, வேள்விக் குறிப்புகள் திருமாலையே குறிப்பனவாக உள்ளன. இதில் தவறு ஒன்றும் இல்லை என்றா லும் அக்குறிப்புகள் மிகப் பிற்காலத்து எழுந்த புராணக் கதை களையே மிகுதியும் பேசுகின்றன. திருமால் முக்குண வேறுபாட்டால் மும்மூர்த்திகளானதாகப் பரிபாடல் 13ஆம் பாடல் பேசுகின்றது. பொலம்புளை இதழனி மணிமடற் பேரணி இலங்கொளி மருப்பிற் களிறு மாகி மூவுருவாகிய தலைபிரி ஒருவனை........... 3垒 இதே போல முருகனைப் பற்றிப் பேசும் பாடல்கள் அவன் பிறப்புப் பற்றி வடக்கே எழுந்த புராணக் கதைகளை அப்படியே போற்றி எடுத்துப் பேசுகின்றன; ஆனால், முருகனைப் பற்றி எழுந்த திருமுருகாற்றுப்படை, பரிபாடல் கூறும் கதையை ஏற்க விரும்பவில்லை. பரிபாடல்லில் காணப் பெறும் பிற்காலக் கதை களைக் காணும்பொழுது, சங்க இலக்கியத் தொகுப்பினுள் கடைசியாகத் தோன்றித் தொகுக்கப் பெற்ற நூல் பரிபாடலே ஆகும் என்று எண்ணத் தோன்றுகிறது. பரிபாடல் தவிர்த்தபிற சங்கப் பாடல்களில் வேள்வி பற்றிப் பேசுகையில் எந்தக் கடவுளரையும் குறிப்பிடவில்லை. வேள்வி பற்றிப் பேசும் பதிற்றுப்பத்தின் 21ஆம் பாடலும், 'உருகெழு மரபில் கடவுட் பேணி என்று மட்டுமே பேசுகிறது. இவ்வாறு கூறும் இந்நூல்கள் சிவபெருமானையோ, திருமாலையோ அறிந்திருக்கவில்லை போலும் என்று கூறவும் இடம் இல்லை. பதிற்றுப்பத்தின் 43ஆம் பாடல், 'கடவுள் நிலைஇய கல்லோங்கு நெடுவரை வடதிசை எல்லை இமயம் ஆக தென்னங் குமரி யோடு...... 35 என்றும், 31 ஆம் பாடல், 'தெள்ளுநர் வடிமணி எறியுநர் கல்லென உண்ணா பைஞ்ஞலம் பனித்துறை மண்ணி
பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-1.pdf/38
Appearance