உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-1.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 2 பெரியபுராணம் ஒர் ஆய்வு செய்தனர் என அறியமுடிகிறது. எனவே வேள்வி செய்தல் பெரு வழக்காய் இருந்தது என்று கொள்வதற்கும் இடம் இல்லை. மன்னர்களையல்லாத தனியார் அக் காலநிலையில் வேள்வி செய்ய முற்படுதல் பெரும்பாலும் இயலாத காரியம். இப் பொதுக் கூற்றுக்குப் புற நடையாக இருந்தவன் பூஞ்சாற்றுார் பார்ப்பான் கவுணியன் விண்ணந்தாயன் என்பவனேயாவான். தனி மனிதன் மேற் கொள்ள முடியாத பெருஞ் செயலை இவன் மேற்கொண்டா னாகலின் இவனைப் பற்றியும் இவன் செயலைப் புகழ்ந்தும் புறம் 166 ஆம் பாடல் பேசுகிறது. இவனை ஆவூர் மூலங்கிழார் என்ற புலவர் புகழ்ந்து பாடி யுள்ளார். பல்வேறு யாகங்களை வேத முறைப்படி செய்து புகழ் பெற்றவர்கள் விண்ணந்தாயனும் அவன் முன்னோரும் ஆகலின் இப்பாடலினால் அவன் புகழப்படுகிறான். இப் புலவர்பெருமான் சங்கத் தொகுப்புள் பதினொரு பாடல்களைப் பாடியுள்ளார். கிழார் என்ற சிறப்புப் பெயரை உடைமையின் இவர் அந்தணர் அல்லர் வேளாளரே என்பது அறியப்படும். எனினும் விண்ணந் தாயள் செய்த யாகங்களைப் போற்றிப் பேசும் அளவிற்கு இவர் வேதங் கற்றிருத்தல் வேண்டும். பார்ப்பனருள்ளும் இருவகை வர் பாடியுள்ள அகநானூற்றுப் பாடல் (24) ஒன்றின் Լգ-եւկ னுT ஒ மூலமாகப் புதிய செய்தி ஒன்றையும் அறியமுடிகிறது. 'வேளாப் பார்ப்பான் வாளரந் துமித்த வளைகளைந் தொழிந்த கொழுந்தின் அன்ன ' என்ற பாடலால் வேள்வி செய்யாத பார்ப்பனர் இத் தமிழகத்தில் அன்றும் இருந்தனர் என்பதை அறிய முடிகிறது. இவர்கள் பிழைப்புக்காகச் சங்கை வாங்கி அதிலிருந்து மகளிர் அணியும் வளையல்கள் செய்வதற்காக அச் சங்கினை அரத்தினால் அராவி வளை செய்தனர் என்பதையும் அறியலாம். எனவே இங்கு வாழ்ந்த பார்ப்பனர் அனைவரும் வேள்வி செய்தல் தொழிலை மேற்கொள்ளவில்லை என்று ஊகிக்கவும் இடந்தருகிறது. 'அறுவகைப்பட்ட பார்ப்பனப் பக்கம் என்ற தொல் காப்பியச் சூத்திரம் பார்ப்பனர் அனைவர்க்கும் உரியதாகாமல் அவருள் அறுவகைத் தொழிலை மேற்கொண்டவர்களை மட்டுங் குறிப்பதாயிற்று. இவர்கள் தத்தமக்குரிய தொழில்களைச் செய்யாத வழி, இழிந்தவராகக் கருதப்பெற்றனர் என்பதை