உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-1.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 4 பெரியபுராணம் - ஓர் ஆய்வு 1) சிவபிரான் வாயிலிருந்து நீங்காதது வேதம் 2) அறத்தை மேவிய (ஒன்று புரிந்த) நான்கு கூறுகளை உடையது வேதம் 3) ஆறு அங்கங்கள் அதற்கு உண்டு 4) இதனை எதிர்த்து நூல் செய்தவரும் உண்டு 5) அவர் சொல்லியவை மெய் போலத் தோற்றம் அளித்தன 6) ஆனால் ஆழ்ந்து உணர்வாரே அதன் பொய்த் தன்மையை அறிவர் - 7) அவ்வாறு அறிந்தவர்கள் அப் பொய்யை ஏற்காமல், மெய்யைக் கொண்டனர். 8) இருபத்தொரு வகையான வேள்விகளைத் தட்டுப்பாடு இல்லாமல் செய்தவர் அவன் முன்னோர் 9) அத்தகு சிறப்பினை உடையோர் மரபில் வந்தோன் (1-2) சிவபிரான் வாயில் வேதங்கள் ஒலித்துக்கொண்டு நீங்காதிருக்கும் என்ற கருத்து, பிராமணங்கள், ஆரண்யகங்கள், உபநிடதங்கள் என்பவை தோன்றியதற்கு மிகவும் பிற்பட்ட காலத்தில் தோன்றிய கருத்தாகும். இது பற்றிப் பின்னர் விரிவாக ஆயப்படும். - 4,5,6 வரிகள் மூலம் வேத காலத்திலேயே அவ் வேதத்தின் கர்ம காண்டத்தை எதிர்த்து, ஞானகாண்டத்தை ஏற்றுக் கொள் பவர்கள் கூட்டம், இவை இரண்டையுமே ஏற்றுக் கொள்ளாதவர் கூட்டம் எனப் பல பிரிவினர் இருந்ததை அறியமுடிகிறது. முந் நூற்றுக்கும் மேற்பட்ட கூட்டத்தினர் இப் பிரிவில் அடங்குவர். கர்மப் பகுதியை மட்டும் ஏற்காதவர்கள்; அவி சொரிதலை மட்டும் ஏற்காத விராத்தியர் எனப்படும் கூட்டத்தார்; வேதத்தை முற்றிலும் ஏற்காத பெளத்தர்கள் ஈறாகப் பல பிரிவினர் இருந் தனர். இப்புலவர் எந்தப் பகுதியினரைக் குறிக்கிறார் என்பது தெரியவில்லை. புறநானூற்றின் பழைய உரைகார் 6, 7 ஆம் அடிகட்கு, 'வேதத்திற்கு மாறுபட்ட நூல்களைக் கண்டோராகிய புத்தர் முதலாயின. புறச் சமயத்தோரது மிகுதியைச் சாய்க்கவேண்டி, அவரது மெய் போன்ற பொய்யை உளப் பட்டறிந்து அப் பொய்யை மெய்யென்று கருதாமல் உண்மைப் பொருளை அவர்கட்கு ஏற்பச் சொல்லி' " என்று உரை கூறிப்போகிறார்.