உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-1.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை 1 5 வேதத்திற்கு மாறுபட்டவர்கள் என்பதற்கு உரையாசிரியர் புத்தர் முதலான புறச் சமயவாதிகள் என்று பொருள் கூறுவது ஆராயத்தக்கது. வேள்விகளை விரிவாகக் கூறும் வேதங்கள் சிவபிரான் என்ற ஒருவனைக் கனவிலும் கருதவில்லை. ரிக் வேதத்தில் காணப்பெறும் ருத்ரனே பிறகு ருத்ர சிவனாக ஆயினான் என்று வேத ஆய்வாளர் கூறுகின்றனர். இதுபற்றியும் பின்னர் ஆயப்படும். அப்படியானால் வேதம் கூறாத, வேத காலத்துக்கு மிகவும் பிற்பட்ட ஸ்வேதாஸ்வதர உபநிடதத்தில் மட்டுமே முதன்முதலாகப் பரம்பொருள் என்று கூறப்படும் சிவபெருமானை முதுமுதல்வன் என்று கூறும் புலவர், அவன் வாய் ஓயாமல் வேதஞ் சொல்லும் என்ற பிற்காலப் புராணக் கருத் தைப் பேசும் புலவர், இவை இரண்டையும் கூறும் அதே நேரத் தில், வேத விதிப்படி வேள்வி செய்தனர் விண்ணந்தாயன் மரபினர் என்று கூறுவது முரனுடையதாகும். இதற்கு ஒர் அமைதி காணவேண்டிய கடப்பாடு ஏற்படு கிறது. விண்ணந்தாயன் கவுண்டின்ய கோத்திரத்தான் (கவுணியர் மரபு) என்று பாடலின் கொளு குறிக்கின்றது. இக் கோத்திரத்தார் வேதம், பிராமணங்கள், ஆரண்யகங்கள், உபநிடதங்கள் ஆகிய அனைத்தையும் கற்றுத் துறை போனவர் களாயினும், வேதங் கூறும் இந்திரன், வருணன், பிரஜாபதி முதலிய தெய்வங்களையோ, உபநிடதங் கூறும் பிரமத்தையோ ஏற்றுக் கொள்ளாமல் சிவபெருமானையே பரம்பொருளாக ஏற்றுக் கொண்டனர் என்று தெரிகிறது. --- ஏழாம் நூற்றாண்டில் தமிழகத்தில் தோன்றிய திருஞான சம்பந்தரும் இந்தக் கவுண்டின்ய கோத்திரத்தைச் சேர்ந்தவரே ஆவார். தாம் நான்கு வேதங்களையும் அவற்றின் உறுப்புக் களையும் சிக்கற உணர்ந்துள்ளதாக அவரே கூறுகிறார். முத் தீ வளர்த்தல், வேள்வி செய்தல் தம் குடியில் உண்டென அவரே கூறுகிறார். வேதங் கூறும் இந்திரன், பிரஜாபதி முதலி யோரை ஏற்றுக்கொள்ளாமல் சிவனையே பரம் பொருளாகக் கொண்டு வேள்வி செய்தவராவர் இக் கோத்திரத்தார். எனவே ஞானசம்பந்தருக்கு ஆயிரம் ஆண்டுகட்கு முற்பட்டு வாழ்ந்த அதே கோத்திரத்தைச் சேர்ந்த விண்ணந்தாயன் சிவபெருமானை முதுமுதல்வனாகக் கொண்டதில் வியப்பில்லை. அவ்வாறு விண்ணந்தாயன் சிவபிரானை முதற் கடவுளாகக் கொண்டதை அந்நாளில் பெரு வழக்கினராக இருந்த வைதிகர்