I 6 பெரியபுராணம் - ஒர் ஆய்வு கள் ஏற்றக்கொள்ள மறுத்திருக்க வேண்டும். பழைய வேத முறையில் இந்திரன், வருணன், பிரஜாபதி என்பாரை முன்னிட்டே அக்னியின் மூலமாக வேள்வி செய்யவேண்டுமே தவிர சிவபிரானை ஏற்கக் கூடாது என்று வடக்கே இருந்து இங்கு வந்து குடியேறிய வைதிகர்கள் மறுத்துக் கூறியிருப்பின், அதில் வியப்ப தற்கு ஒன்றும் இல்லை. அவர்கள் மறுப்புக்கள் பழைய வேத அடிப்படையில் எழுந்திருக்குமாகலின் தாம் கூறுவதே உண்மை என அவர்கள் சாதித்திருக்கக்கூடும். மெய்யன்ன பொய் உணர்ந்து (6) எனக் கவிஞர் கூறும்பொழுது வைதிகர்களின் ஒரு பகுதியாரையே குறிக்கின்றார் என்று கொள்வதில் தவறு இல்லை. மேலும் இவ்வாறு கூறியவர்கள் வலிமை பெற்றிருந்தனர் என்றும், கருத்து வேறுபாடு கொண்டிருந்தனர் என்றும் கவிஞர் கூறுகிறார். ‘இகல் கண்டார் மிகல் சாய' (5) என்ற அடி ஆழமான பொருளுடையது. இகல் என்ற சொல்லுக்குப் பல்வேறு பொருள்கள் உள்ளன. பகை, போர், மாறுபாடு என்பவற்றுடன், 'ஞான பாதப் பொருளில் இகல் அறுத்து' (சிக்கல்) என்ற மேற்கோளையும் காட்டிச் செல்கிறது தமிழ்ச்சொல் அகராதி (லெக்ஸிகன் பக்கம் 268). இங்குச் சமயத் தத்துவம் குறித்து இகல் தோன்றினமையின் போர் என்ற பொருள் பொருந்தாது. மாறுபாடு, சிக்கல் என்ற பொருள்களே பொருத்தமாம். எனவே பழைய வடநாட்டு வைதிகர்கட்கும், இத் தமிழகத்து வாழ்ந்த கவுண்டின்ய மரபினரான அந்தணர்க்கும் வேத முதல்வன் யார் என்பதில் ஏற்பட்ட கலை (மாறுபாட்டை, சிக்கலை) விண்ணந்தாயன் மரபினோர் தீர்த்தனர் என்ற கொள்வதே பொருத்தமாகத் தோன்றுகிறது. அவ்வாறு மாறுபாட்டைக் கண்டவர்கள் மிகல் சாயுமாறு இவர்கள் வென்றனர் என்றமை யின் வேதத்தை ಧ್ಧಿ வடவர், தமிழர் இடையே எழுந்த மாறுபாட்டையே கவிஞர் குறிக்கிறார் என்று பொருள் கொள்ளுதல் நேரிதாம். இவ்வாறு பொருள் கொள்ள மற்றோர் காரணமும் உண்டு. வைதிக, பெளத்தப் போராட்டம் வட நாட்டில் நிகழ்ந்ததே அன்றி இத் தமிழகத்தில் அது நடைபெற்றதாகச் சங்கப் பாடல் கொண்டு எண்ண, ஆதாரமே இல்லை. பின்னர் திருஞானசம்பந்தர் தொடங்கிய போராட்டம் சமணர் பெளத்தர்களுடன் மட்டுமன்று என்பதையும் குறிப்பாக உணர இது இடந்தருகிறது. அவர்களுடன் இவர் நடத்திய போராட்டம் வெளிப்படையானது. சிவபரம்ப்ொருளை ஏற்றுக்
பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-1.pdf/44
Appearance