20 பெரியபுராணம் ஒர் ஆய்வு ஒரே வழி அப் பழங்கால மக்களிடையே தோன்றிய இலக்கியங் களை அறிவதே ஆகும். இந்த அடிப்படையில்தான் சங்ககால மக்கள் வாழ்க்கையில் சமயம் எந்த இடத்தை வகித்தது? எவ்வெத் தெய்வங்களை அவர் கள் வழிபட்டனர்? எவ்வாறு வழிபட்டனர்? என்பவற்றைத் தெரிந்துகொள்ள முயல்கிறோம். சங்கப் பாடல்களில் வேதம், வேள்வி என்பவை வருவதால் அந்த மூல வேதங்களையும் அந்த வேதங்களிற் கூறுப்பெற்றுள்ள வேள்வி களையும் காண முற்படு கிறோம். அதிற் கூறப்பெற்றவை அப்படியே இப் பாடல்களிற் பிரதிபலிக்கின்றனவா என்று காண்பதுடன் இதே அடிப்படையில் தான் சிவபெருமானைப் பற்றியும் அறிய முற்படுகிறோம். முது முதல்வனாகிய சிவபெருமான் ஓயாமல் வேதத்தைச் சொல்லிக் கொண்டிருக்கிறான் என்று புறம் 166ஆம் பாடல் கூறுகிறது. இதன் அடிப்படை யாது? வேதங்களில் சிவபிரான் குறிக்கப்படு கிறானா? அவன் வாய் எப்போதும் வேதஞ் சொல்லிக் கொண் டிருக்கும் என்று அவை கூறுகின்றனவா? என்பவற்றைக் காண்பதே இந்த ஆய்வின் நோக்கமாகும். ரிக் வேதமே மிகப் பழமையானது என்பது இன்று அனைவ ராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட கொள்கையாகும். ஏனைய யஜூரும், சாமமும் ரிக் வேத மந்திரங்கள் பலவற்றை அப்படியே ஏற்றுக்கொண்டு ஓரளவே தமக்கெனத் தனி மந்திரங்களைக் கொண்டுள்ளன. அதர்வண வேதம் சாதாரண தந்திர மந்திரங் களைக் கொண்டுள்ளது. இந்தப் பழைய வேதமாகிய ரிக்கில் ருத்ரனுக்கு ஒதுக்கப் பெற்றுள்ள இடம் மிக மிகத் தாழ்வான ஒன்று ஆகும். கொடியவனும், அச்சத்தை விளைவிப்பவனும் ஆகிய ருத்ரனுடைய வடிவமைப்புக்கள் பல இடங்களில் ரிக்கில் பேசப்படுகின்றன. கைகள், உறுப்புக்கள், கண், வாய், நா முதலியவை பேசப்படுகின்றன. சடை உடையவன்' அவன் மாநிறமானவன்' (சிவபெருமான் சிவந்த நிறமுடையவன் என்ற தமிழர் கொள்கைக்கு இது முற்றிலும் மாறுபட்டதாகும்). அவன் வயிறு கறுத்தும் முதுகு சிவந்தும் உள்ளன. அவனுடைய ஆயுதங்கள் மிகக் கொடுமையானவை. வாஜஸ நேய ஸம்ஹிதை' யில் கூறுப்பெற்றபடிக் கண்டால் ருத்ரன் தோலாடை உடையவன். மலைகளில் வசிப்பவன். மலை, காடு என்பவை அவனுடைய அழிக்கும் கொடுமையைத் தாங்கும் இடங்களாகும்." மேலே குறிக்கப் பெற்ற ஸம்ஹிதையின்' பகுதிகளின்படி ருத்ரன் இரட்டையனவாகவும் பேசப்படுகிறான்."
பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-1.pdf/48
Appearance