உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-1.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிமுக உரை திருமதி உருக்குமணி அம்மையார், கிருஷ்ணசாமிப்பிள்ளை அவர்கள் மனமுவந்தளித்த மூலதனத்தைக் கொண்டு அவர்கள் பெயராலேயே தஞ்சைத் தமிழ் பல்கலைக் கழகத்தில் 'பன்னிரு திருமுறைக் கட்டில் நிறுவப்பெற்றது. இக்கட்டிலின் முதற்பேராசிரியராக அமர்ந்து பெரிய புராணம் பற்றிய ஆய்வு ஒன்றைச் செய்யுமாறு அன்றையத் துணைவேந்தர், முது முனைவர் வ. அய். சுப்பிரமணியம் அவர்கள் என்னைக் கேட்டுக் கொண்டார். . இன்று நன்கு வளர்ச்சி அடைந்துள்ள திறனாய்வுக் கலையைப் பயன்படுத்தி இத்திறனாய்வைச் செய்ய வேண்டும் என்று தான் அவரும் விரும்பினார்; பெரியபுராணத்தில் மூன்றில் ஒரு பங்கைத் தமக்கென எடுத்துக் கொண்ட திருஞானசம்பந்தரின் மூன்று திருமுறைகளை யும் மறுபடியும் படிக்க நேர்ந்தபொழுது சில ஐயங்கள் மனத்தில் தோன்றின. தமிழ் நாட்டில் தமிழராகப் பிறந்த ஒருவர், தாம் பாடியுள்ள நானூற்றுச் சொச்சம் பதிகங்களிலும், திருக்கடைக் காப்பில் தம் பெயரைக் குறிப்பிடும்பொழுது தமிழுடன் சேர்த்தே கூறி யுள்ளமை வியப்பைத் தந்தது. இவ்வளவு தூரம் தமிழுடன் தம்மை இணைத்துப் பேசும் பிள்ளையார், தாம் இருக்கு வேதி என்றும், முத்தீ வளர்ப்பவர் என்றும், யாகங்கள் செய்யும் குடியில் பிறந்தவர் என்றும் நான்கு வேதங்கள், ஆறு அங்கங்கள் என்ப வற்றிலும் வல்லவர் என்றும் அடிக்கடிக் கூறிக்கொள்வது ஏன்? என்ற வினாவும் தோன்றலாயிற்று. மேலும் தமக்குள்ள வேதத் தொடர்பைப் பாடல்களின் முதல் மூன்று அடிகளில் கூறாமல், விடாமல் நான்காவது அடியில் தமிழுடன் சேர்த்துத் தம்மைக் கூறிக்கொள்வதும் ஏன்? என்ற வினா மனத்தை அரிக்கத் தொடங்கியது.