உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-1.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

UU6 பாடல்கள் என்பவை தவிர வேறு தமிழ் நூல்கள் தோன்றியதாக அறியக் கூடவில்லை. தமிழகத்தில் பிறமொழி பேசுபவர்கள் ஆட்சியில் இருந்தமை யின் தமிழ் வாழவோ, வளரவோ வாய்ப்பில்லை. எனவே இம் மொழியை மீட்டும் புத்துயிர் ஊட்டி_வாழ்விக்க முனைந்தமையின் பிள்ளையார் தமிழை அழுத்தம் திருத்தமாகப் பதிகந்தோறும் பாடினார். இத் தமிழகத்தின் நீண்ட வரலாற்றில் இம்மாதிரி நிலைமை மறுபடியும் 15, 16ஆம் நூற்றாண்டுகளில் தோன்றலாயிற்று. திருமலை நாயக்கர் காலத்தில் இதே நிலைமை நீடித்திருந்த பொழுது குமரகுருபர முனிவர் தோன்றுகிறார். தம்முடைய பிரபந்தங்களில் பலப்பல இடங்களில் தமிழின் பெருமையைப் பேசுகிறார். எனவே எவ்வெப் பொழுதெல்லாம் தமிழ்மொழிக்கு இடையூறு வருகின்றதோ அவ்வப்பொழுது யாரேனும் ஒரு பெரியவர் தோன்றித் தமிழின் பெருமையை இத் தமிழர்க ளிடையே பேசி இவர்கள் உறக்கத்தைக் கலைத்தனர் என்று நினைப்பதில் தவறு இல்லை. இந்த முறையில் இவ்வாராய்ச்சி சென்றமையின் வேதங்கள் எந்த அளவுக்குச் சிவ வழிபாட்டை ஏற்றுக் கொண்டன என்று ஆராய நேரிட்டது. வடமொழிப் பயிற்சி இன்மையால் என்னுடன் உடன் பணிபுரியும் முனைவர் கூ.ரா. நஞ்சுண்டன் அவர்கள் உதவியை நாடினேன். நல்ல வேத விற்பன்னர் ஆயினும் ஆய்வு செய்கை யில் விருப்பு வெறுப்பை நீக்கி ஆய முற்ப்டும் பண்புடையார் அவர். எனவே வேதம் பற்றிய பல ஆங்கில ஆராய்ச்சி நூல் களைப் படிக்கவும் தேவை ஏற்படும்பொழுது முனைவர் நஞ்சுண்டன் உதவியுடன் மூல நூலையும் சாயன பாஷ்யம் முதலியவற்றையும் காணமுடிந்தது. - பிள்ளையார் பாடல்களில் சிவபெருமானைப்பற்றி வரும் பல்வேறு புராணக் கதைகளும் இடம் பெற்றுள்ளன. அதே நேரத்தில் தாம் நான்மறை, ஆறங்கம் வல்லவர் என்றும் கூறிக் கொள்கிறார். இருக்கு வேதிகளுள் மிகப் பழங்காலத்திலேயே மறைந்துபோன கெளண்டின்ய கோத்திரத்தைச் சேர்ந்தவர் அவர் என்பதையும் அவரே கூறிக் கொள்கிறார். எனவே வேதங்கள், பிராம்மணங்கள், ஆரண்யகங்கள், உபநிடதங்கள் என்பவற்றில் பிள்ளையார் போற்றும் சிவபெருமானுடைய இடம்