007 யாது? என்று ஆய முற்பட்டேன். அதன் பயனாக இன்று பலரும் ஏற்க முற்படாத, ஏற்க விரும்பாத பல முடிவுகள் தோன்றின. வேதம் போற்றும் வைதிகர் அவற்றினும் மேம்பட்டதாக எதனையும் ஏற்க மாட்டார்கள். கிருஷ்ண யஜுர் வேதம் என்கிற தைத்திரிய சம்ஹிதையில் இடம் பெற்றாலும் பூரீருத்ரம் ரிக் வேதிகளால் அதிகம் போற்றப்படுவதில்லை. எந்த வைதிகரும் பஞ்சாட்சர செபம் செய்வதில்லை. பூரீருத்திரத்தின் நடுவில் 'நமஹ சிவாய; சிவதராயச' என்ற மந்திரம் வருவது உண்மைதான். இங்கு வரும் சிவ சப்தத்திற்கு மங்களம் என்று பொருள் விரித்து இதனைப் பண்புச் சொல்லாகப் பொருள் கூறியுள்ளனர். - மேலும் கிரியைகட்கே முதலிடம் தரும் வேதங்களில் வரும் மந்திரங்கள் உச்சரிக்க வேண்டிய முறை தெரிந்து உச்சரித்தால் தான் பயன் தரும் என்று கருதினர்; கூறினர். எனவே இந்த மந்திரங்களைப் பொறுத்தமட்டில் இவை ஒலி முறையால் (Phonetic Value) பயன் விளைப்பவை என்றே கருதினர்; கூறினர். - இதன் எதிராகப் பிள்ளையார் கூறும் ஐந்தெழுத்து, 'காதலாகிக் கசிந்து கண்ணிர் மல்கி ஒதுவார் தமை நன்னெறிக் குய்ப்பது என்று பேசப்பட்டது. வடமொழியை நன்கு அறிந்து, வேதங்களை யும் நன்கு அறிந்திருந்த பிள்ளையார் ஐந்தெழுத்து என்றுதான் கூறுகிறாரே தவிரப் பஞ்சாட்சரம் என்ற சொல்லைப் பயன் படுத்தவில்லை என்பதும் வியப்பை அளித்தது. பூரீருத்திரம் நமகம் பகுதியில் வரும் பல்வேறு மந்திரங்களுள் நமஹ சிவாய என்ற இதுவும் ஒன்று. ஆனால் பிள்ளையார் கூறும் ஐந்தெழுத்து, முதலும் முடிவும் அனைத்தும் அதுவாகவே உள்ளது. - மேலும் பிள்ளையார், 'வேதம் நான்கினும் மெய்ப்பொருளாவது நாதன் நாமம் நமச்சிவாயவே.' என்றும்,
பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-1.pdf/9
Appearance