உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரிய புராண விளக்கம்-8.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசு நாயனார் புராணம் - 13 . ஆகம பூசை புரிய இனி தவ்விடத்துப் போக என அமரர் போற்றிசைப்ப-ஏகிப் பொருப்பரையன் ஏவலொடு போந்துபல கோடித் திருத்தகு மாதர் உடன்சேர-விருப்புடனே தென்றிசையிற் சென்று திருவாய் மலர்ந்த உயர் நன்று திகழ் காஞ்சி நகரெய்தி. இலக்கண விளக்கப்பாட்டியலில் வரும் ஒரு பாடல் வரு torrgy: ' குடிமகனைக் கலிவெண் பாக் கொண்டு விழைதொல் குடிமுதல் விளங்க உரைத் தாங் கிழைபுனை நல்லாரிவர் மணிமறுகின் மற்றவன் பவனிவர வேழ்பருவம் உற்றமா னார் தொழப் போந்த துலாவாம் ஐந்துமுதல் ஏழாண்டு பேதை எட்டுமுதல் நான்காண்டும் பெதும்பை ஆறிரண்டொன் றேயாகும் மங்கை பதினான் காதிபத் தொன்பான் காறும் எதிர்தரு மடந்தைமே லேயாறும் அரிவை ஆறுதலையிட்ட இருபதின்மே லோர் ஆறும் தெரிவை எண்ணைந்து பேரிளம் பெண் எண்: றோரும் பருவத்தோர்க் குரைத்தனரே. ' பிறகு வரும் 319 ஆம் கவியான கருத்து வருமாறு: அந்தக் காஞ்சி மாநகரத்தில் வாழும் மக்கள் தாங்கள் வாழும் மாடங்கள் உயரமாக நிற்கும் திருவிதிகளினுடைய பக்கங்கள் எல்லாவற்றிலும், அழகைப் பெற்ற தங்களுடைய திருமாளிகைகளினுடைய முன்பு உள்ள வாசல்களில் தோரணங்களையும் உயரமாக உள்ள வாழை மரங்களோடு கமுக மரங்களையும் வரிசை வரிசையாக நட்டு வைத்து நீர் நிரம்பிய தங்கத்தால் செய்த பூரண கும்பத்தையும், திருவிளக்குகளையும், இதழ்கள் அமைந்துள்ள மலர்களைக்